பப்புவா கினியாவில் எரிமலை வெடிப்பு.. ரூ.8 கோடி உடனடி நிவாரண உதவியை அறிவித்த இந்தியா..

By Ramya s  |  First Published Dec 7, 2023, 8:47 AM IST

எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட சேதம் மற்றும் அழிவுகளைச் சமாளிக்க உதவும் வகையில், பப்புவா நியூ கினியா நாட்டிற்கு உடனடி நிவாரண உதவியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா அறிவித்தது. 
 


தீவு தேசமான பப்புவா நியூ கினியாவில் உள்ள உலாவுன் மலையில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஏற்பட்டதால், 26,000 க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் அந்த பிராந்தியத்தில் அவசர மனிதாபிமான தேவைகளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் பேரழிவால் ஏற்பட்ட சேதம் மற்றும் அழிவுகளுக்காக பப்புவா நியூ கினியா அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இந்தியா ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது. மேலும் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட சேதம் மற்றும் அழிவுகளைச் சமாளிக்க உதவும் வகையில், பப்புவா நியூ கினியா நாட்டிற்கு உடனடி நிவாரண உதவியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ. 8 கோடி) இந்தியா அறிவித்துள்ளது. 

Latest Videos

undefined

மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் கீழ் நெருங்கிய நண்பர் மற்றும் மேம்பாட்டு கூட்டாளராக இருக்கும் பப்புவா நியூ கினியாவுக்கு இந்தியா உடனடி நிவாரண உதவிகளை வழங்குகிறது. இரு நாடுகளின் நட்பு மற்றும் மக்களிடையேயான ஒற்றுமை ஆகியவற்றின் அடையாளமாக பப்புவா நியூ கினியாவில் புனரமைப்பு முயற்சிகளுகு உதவும் வகையில் இந்திய அரசாங்கம் நிவாரணம், மறுவாழ்வு மற்றும் ஆதரவுக்காக உடனடி நிவாரண தொகையாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குகிறது. " என்று தெரிவித்துள்ளது.

மேலும் "2018 இல் நிலநடுக்கம் மற்றும் 2019 இல் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து, இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் நெருக்கடி மற்றும் பேரழிவுகளின் போது இந்தியா பப்புவா நியூ கினியாவுடன் உறுதியாக நிற்கிறது" என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மண் மட்டும் தான் காலநிலை சூப்பர் ஸ்டார்.. COP28 துபாய் மாநாட்டில் சத்குரு பேச்சு..!

நவம்பர் 2019 இல் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் இந்தோ-பசிபிக் பெருங்கடல்களின் முன்முயற்சியின் (ஐபிஓஐ) பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஒரு முக்கிய தூண் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பப்புவா நியூ கினியா பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" என்ற பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நில அதிர்வு பகுதியின் வளைவு ஆகும், இங்கு உலகின் பெரும்பாலான பூகம்பம் மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி ஏற்படுகின்றன. குறிப்பாக உலாவுன் 1700களில் இருந்து தொடர்ந்து எரிமலை வெடிப்பு ஏற்பட்டு வருகிறது. 2019 இல் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக, 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!