நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பத்து பாஜக எம்.பி. புதன்கிழமை தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரஹலாத் படேல் உள்ளிட்ட 12 பாஜக எம்.பி.க்களில் பத்து பேர் புதன்கிழமை தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
விரைவில் அவர்கள் அமைச்சரவையில் இருந்தும் விலகுவார்கள் என்று தெரிகறது. உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சராக இருக்கும் பிரஹலாத் படேல் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் , "நான் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். விரைவில் அமைச்சரவையில் இருந்தும் விலகுவேன்" என்று கூறியுள்ளார்.
ஒரு நபர் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரே நேரத்தில் செயல்படுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பத்து எம்.பி.க்களும் மாநில பதவிகளைப் பெறுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர் என்று கருதப்படுகிறது.
நேரு ரெண்டு தவறுகளைத் தவிர்த்திருந்தால்... மக்களவையில் அமித் ஷா ஆவேசப் பேச்சு
ராஜஸ்தானின் ஆல்வாரைச் சேர்ந்த பாபா பாலக்நாத் மற்றும் சத்தீஸ்கரின் சர்குஜாவைச் சேர்ந்த ரேணுகா சிங் இருவரும் இதுவரை ராஜினாமா செய்யவில்லை. ஆனால் அவர்களும் விரைவில் எம்.பி. பதவியில் இருந்து ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும் பாஜக தலைவர்களில் பலர் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களின் முதல்வர் ஆவதற்கான போட்டியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ராஜினாமா செய்த பின், கட்சி சார்பில் முதல்வர் யார் என்ற அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சௌஹான் ஐந்தாவது முறையாக முதல்வராவதைத் தவிர்த்து, புதியவரைத் தேர்வு செய்யலாம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் சுமார் 5 மணி நேரம் நடைபெற்றது.
பால் பாக்கெட் கூட தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யவில்லை: அன்புமணி ராமதாஸ் வேதனை