2023ஆம் ஆண்டில் நிலநடுக்கங்கள் அதிகரிப்பு!

Published : Dec 06, 2023, 05:39 PM IST
2023ஆம் ஆண்டில் நிலநடுக்கங்கள் அதிகரிப்பு!

சுருக்கம்

நடப்பாண்டில் நிலநடுக்க சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன

வட இந்தியாவிலும் நேபாளத்திலும் அவ்வப்போது மிதமான நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் நிலநடுக்கங்கள் அதிகரித்துள்ளதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த 3 ஆண்டுகளிலும் நடப்பாண்டிலும் டெல்லியிலும் உள்ள தேசிய நில அதிர்வு மையம் பதிவு செய்துள்ளபடி, 2020-ம் ஆண்டில் ரிக்டர் அளவு கோலில் 3.0 முதல் 3.9 வரை பதிவான நில அதிர்வுகள் 42.  4.0 முதல் 4.9 வரையிலான நிலநடுக்கங்கள் 18, 5.0 முதல் 5.9 வரை 1 என பதிவாயின. 6.0 முதல் 6.9 வரையில் நில நடுக்கம் பதிவாகவில்லை.

2021ஆம் ஆண்டில் ரிக்டர் அளவு கோலில் 3.0 முதல் 3.9 வரை பதிவான நில அதிர்வுகள் 41. 4.0 முதல் 4.9 வரையிலான நிலநடுக்கங்கள் 18, 5.0 முதல் 5.9 வரை 1 என பதிவாயின. 6.0 முதல் 6.9 வரையில் நில நடுக்கம் பதிவாகவில்லை.

2022ஆம் ஆண்டில் 3.0 முதல் 3.9 வரையிலான ரிக்டர் அளவில் பதிவான நில அதிர்வுகள் 41. 4.0 முதல் 4.9 வரையிலான நிலநடுக்கங்கள் 20, 5.0 முதல் 5.9 வரை 3 என பதிவாயின. 6.0 முதல் 6.9 வரையில் 1 நில நடுக்கம் பதிவானது.

2023ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் வரையில் ரிக்டர் அளவு கோலில் 3.0 முதல் 3.9 வரையிலான நில அதிர்வுகள் 97. 4.0 முதல் 4.9 வரையிலான நிலநடுக்கங்கள் 21-ம், 5.0 முதல் 5.9 வரை 4 நிலநடுக்கங்களும், 6.0 முதல் 6.9 வரையில் 2 நில நடுக்கங்களும் பதிவாயின.

நவம்பர் மாதம் காணாமல் போன 520 குழந்தைகளை மீட்டு குடும்பத்திடன் ஆர்.பி.எஃப் ஒப்படைப்பு!

இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) இந்தியாவின் நில அதிர்வு மண்டல வரைபடத்தை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட நிலநடுக்க மண்டலங்களில் நிலநடுக்கத்தை எதிர்க்கும் கட்டடங்களை கட்டுவதற்கான அத்தியாவசிய பொறியியல் தரங்கள் மற்றும் நடைமுறைகளை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை அது வழங்குகிறது.

நிலநடுக்கம் தொடர்பான தயார்நிலை மற்றும் பதில் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக நிலநடுக்கம் தொடர்பான ஒத்திகைகள், விழிப்புணர்வுத் நிகழ்வுகள்  போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) பொறுப்பாக உள்ளது. இத்தகவலை மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் கையெடுத்து கும்பிட்டு கதறல்..! மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு விளக்கம்
மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!