இந்திய தேசியக் கொடி விலை ரூ.25 தான்.. ஆன்லைனில் வாங்குவது எப்படி?

By Raghupati R  |  First Published Aug 14, 2024, 1:21 PM IST

ஹர் கர் திரங்கா அபியான் 3.0 இன் ஒரு பகுதியாக, தபால் நிலையங்கள் மூலம் இந்திய தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது. பிரதமர் மோடி, 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தை வெற்றியடையச் செய்யுமாறு ஒவ்வொரு குடிமகனையும் வலியுறுத்தியுள்ளார்.


சுதந்திர தின கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக நடத்த, ஹர் கர் திரங்கா அபியான் 3.0 இன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இந்திய தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது. 78வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு சிறப்பு வேண்டுகோளை விடுத்துள்ளார். 

பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தை வெற்றியடையச் செய்யுமாறு ஒவ்வொரு குடிமகனையும் வலியுறுத்தியுள்ளார். மக்கள் தங்கள் டிபிகளை இந்தியாவின் தேசியக் கொடியாக மாற்றி, தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

சுதந்திர தினத்தன்று மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 7 இடங்கள் இவையே..!

எனவே, கொடிகளை ஆன்லைனில் எப்படி வாங்குவது? என்பதை பார்க்கலாம். ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் பல பதிப்புகள் கிடைத்தாலும், இந்தியா போஸ்ட் அதன் தளத்தில் சரியான, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொடிகளை விற்பனை செய்கிறது.  இந்திய தபால்களில் இந்திய மூவர்ணக் கொடியின் விலை என்ன? என்று முதலில் பார்க்கலாம்.

இந்திய அஞ்சல் தளத்தில், தேசியக் கொடி 25 ரூபாய்க்கு கிடைக்கிறது. வர்ணக் கொடி வாங்குவதற்கு நீங்கள் இந்தியா போஸ்டில் பதிவு செய்ய வேண்டும். கொடியை முதலில் தேர்ந்தெடுத்து அதனை வாங்கலாம். யூபிஐ அல்லது நெட்பேங்கிங் மூலம் ரூ.25 செலுத்தி பெற்று கொள்ளலாம்.

Independence Day 2024 | சதந்திரதின செங்கோட்டை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

click me!