2011 முதல் 2036 வரையான காலத்தில் 15 வயதுக்குட்பட்டவர்கள் எண்ணிக்கை குறையும் என்றும் கருவுறுதல் விகிதங்கள் குறைவதால் இருக்கலாம் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
2036ஆம் ஆண்டில், இந்தியாவின் மக்கள்தொகை 152.2 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 2011 இல் மக்கள்தொகையில் பெண்கள் எண்ணிக்கை 48.5% ஆக இருந்த நிலையில், அது சற்றே மேம்பட்டு 48.8% ஆக உள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) திங்கட்கிழமை ‘இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2023’ என்ற அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
undefined
2011 முதல் 2036 வரையான காலத்தில் 15 வயதுக்குட்பட்டவர்கள் எண்ணிக்கை குறையும். கருவுறுதல் விகிதங்கள் குறைவதால் இருக்கலாம் என்று அறிக்கை கூறுகிறது. மாறாக, இந்த காலகட்டத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை விகிதம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் சென்னை ஐஐடி மீண்டும் முதலிடம்!
2011ஆம் ஆண்டைவிட 2036 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பாலின விகிதத்திலும் பிரதிபலிக்கிறது. 2011 இல் 1,000 ஆண்களுக்கு 943 பெண்கள் இருந்த நிலையில், 2036 க்குள் 1000 ஆண்களுக்கு 952 பெண்கள் இருப்பார்கள். இது பாலின சமத்துவத்தில் நேர்மறையான போக்கைக் காட்டுவதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மக்கள் தொகை, கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் தொடர்பாக இந்தியாவில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களின் நிலைமை பற்றி விரிவான பார்வையை இந்த அறிக்கை வழங்குகிறது. நகர் மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான இடைவெளி தொடர்பான தரவையும் இந்த அறிக்கை தருகிறது.
பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களின் தரவுகளிலிருந்து இந்த விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன. "பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதிலும் அளவிடுவதிலும் பாலின புள்ளிவிவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை முன்னேற்றத்திற்கான அளவுகோல்களை வழங்குகின்றன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே காணக்கூடிய ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை அறிய உதவுகின்றன” என்று அறிக்கை கூறுகிறது.
2016 முதல் 2020 வரை, 20-24 மற்றும் 25-29 வயதிற்கு உட்பட்டவர்களில் கருவுறுதல் விகிதம் முறையே 166.0 லிருந்து 139.6, மற்றும் 135.4 லிருந்து 113.6 ஆகக் குறைந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. இந்த காலகட்டத்தில் 35-39 வயதினருக்கான கருவுறுதல் விகிதம் 32.7 லிருந்து 35.6 ஆக அதிகரித்துள்ளது.
உங்க வண்டியில் மைலேஜ் அதிகம் கிடைக்கணுமா? இந்த ஈசியான டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!