டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி சேனல் அலுவலகங்களில் வருமானவரித்துறையின் சர்வே 3வது நாளாக இன்றும் தொடர்கிறது.
டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி சேனல் அலுவலகங்களில் வருமானவரித்துறையின் சர்வே 3வது நாளாக இன்றும் தொடர்கிறது.
வருமானவரித்துறை அதிகாரிகள் நிதி ரீதியான புள்ளிவிவரங்களை பிபிசி அலுவலகங்களிடம் சேகரித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் முக்கிய ஆவணங்கள், பல்வேறு புள்ளிவிவரங்களையும் சேகரித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
திரிபுரா சட்டசபை தேர்தல் 2023: தலை தூக்குமா சிபிஐ(எம்)? பாஜக தலைவர்களை அலற வைத்த தேப்பர்மா!!
டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி சேனல் அலுவலகங்களில் செவ்வாய்கிழமை காலை 11.30 மணிக்கு தொடங்கிய வருமானவரித்துறையினர் சர்வே 45 மணிநேரத்துக்கும் மேலாக நீடிக்கிறது.பிபிசி அலுவலகத்தில் இன்று காலையிலிருந்தும் வருமானவரித்துறை சர்வே தொடர்கிறது என்று பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன
வருமானவரித்துறை அதிகாரிகள் கூறுகையில் “ பிபிபி சேனல் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளது தொடர்பாக எழுந்த புகாரையடுத்து, அங்கு சர்வே நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சர்வே இன்னும்சில நாட்களுக்கு நீடிக்கும். சர்வே பணிகள் எப்போது முடியும் என்பது, அதிகாரிகள் ஆய்வைப் பொறுத்து இருக்கிறது. சர்வதேச வரிவிதிப்பு மற்றும் பிபிசி துணை நிறுவனங்களுக்கு நிதிப்பரிமாற்றம், வரிஏய்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
40 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை.. கைப்பற்றப்பட்ட பணம் & பொருட்கள் என்னென்ன.? வெளியான தகவல்
நிறுவனத்தின் அமைப்பு, நிறுவனத்தின் விவரங்கள், மின்னணு சாதனங்களில் இருந்து கிடைக்கும் புள்ளிவிவரங்கள், நிதிப்பரிமாற்றங்கள் ஆகியவற்றை ஊழியர்களிடம் இருந்து அதிகாரிகள் கேட்டு வருகிறார்கள். ஆதாரங்களையும் சேகரித்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
2002 குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி சேனல் பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் வெளியிட்டது. இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அ ரசு தடை விதித்தது. இந்த ஆவணப்படத்துக்கான தடையை விலகக் கோரி பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்தச் சூழலில் பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் திடீரென சர்வே செய்து வருவதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை காட்டமாக விமர்சித்துள்ளன.
பெட்ரோல், டீசல் மீதான வரி குறைகிறது? என்ன காரணம்? மத்திய அரசு பரிசீலனை
ஆனால், பாஜக தரப்பிலோ, “இந்தியாவுக்கு எதிராக நச்சு அறிக்கையை பிபிசி வெளியிட்டுள்ளது” என விமர்சித்துள்ளது.
ஆனால், இதுவரை வருமானவரித் துறை சார்பில் எந்தவிதமான அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை. டெல்லியில் உள்ள பிபிசி சேனல் ஊழியர்கள் கூறுகையில் “ நாங்கள் வழக்கம்போல் செய்திகளை வெளியிடுகிறோம்” எனத் தெரிவித்தனர்.