5g launch in india: 5g launch: நாட்டின் முதல் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

By Pothy RajFirst Published Oct 1, 2022, 11:25 AM IST
Highlights

நாட்டின் முதல் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் அதிவேகமான இன்டர்நெட் வசதி மொபைல்போன்களுக்கு கிடைக்கும். டெல்லி பிரகதி மைதானத்தில் நடக்கும் 6வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாடு, கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். 

நாட்டின் முதல் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் அதிவேகமான இன்டர்நெட் வசதி மொபைல்போன்களுக்கு கிடைக்கும். டெல்லி பிரகதி மைதானத்தில் நடக்கும் 6வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாடு, கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். 

நாட்டின் 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த இரு மாதங்களுக்கு முன் நடந்தது. இதில் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி ஸ்பெக்ட்ராம் விலைபோனது. இதில் பெரும்பகுதியை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கைப்பற்றியது, அடுத்ததாக வோடபோன், பார்திஏர்டெல் நிறுவனங்கள் வாங்கின. 

இந்நிலையில் 5ஜிசேவையை அறிமுகப்டுத்த 3 தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மிகுந்த ஆர்வம்காட்டி பணிகளை முடுக்கின. தீபாவளிக்குள் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தாவில்5ஜி சேவை தொடங்கப்படும் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்தது. வோடபோன், ஏர்டெல் நிறுவனங்களும் ஆர்வம் காட்டின.

இதனிடையே டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் 5 ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக சில நகரங்களுக்கு மட்டும் 5ஜி சேவையும், அதன்பின் அடுத்த 2 ஆண்டுகளில் நாடுமுழுவதும் 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும்.

5G Launch: அடுத்த ஆண்டிற்குள் கிராமங்கள் முழுவதும் 5ஜி கொண்டு வரப்படும்: முகேஷ் அம்பானி

5ஜி சேவையை அறிமுகப்படுத்தப்பட்டபின், நாட்டின் பொருளாதாரம், 2025ம் ஆண்டுக்குள் 45000 கோடி டாலராக அதிகரிக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது

அதிவேக இணையதளம், 5வது தலைமுறைக்கான சேவை ஆகியவை புதிய பொருளாதார வாய்ப்புகளையும், சமூக பயன்களையும், இந்திய சமூகத்தை மாற்றும் சேவையாக 5ஜி சேவை இருக்கும்.

5ஜி வந்துவிட்டது.. பட்ஜெட் விலையில், அமேசான் ஆஃபரில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்!
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் பிரதமர் மோடி முன்னிலையில் 5ஜி சேவையின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்று நிறுவனங்களநிரூபித்தன. 

 

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் புரட்சியாக அதிவேக 5ஜி ஐந்தாம் அலைக்கற்றை இணைய சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திரமோதி pic.twitter.com/0RGmpnZeKU

— DD Podhigai News (@DDNewsChennai)

இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மும்பையில் உள்ள ஒருபள்ளியில் ஆசிரியர் ஒருவரை, மகாராஷ்டிரா, ஒடிசா, குஜராத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருக்கும் மாணவர்களுடன் இணைந்து பாடம் எடுக்கும் வகையில் செயல்விளக்கம் காட்டப்பட்டது.பிரதமர் மோடிக்கு, ஜியோ நிறுவனசிஇஓ ஆகாஷ் அம்பானி செயல்விளக்கம் செய்து காட்டினார். இதன் மூலம் ஆசிரியர்களையும், மாணவர்களையும் எந்தஅளவு நெருக்கமாக 5ஜி சேவை உருவாக்கவிட்டது என்பதை வெளிக்காட்டும். ஏஆர் ஸ்கீரின் மூலம் இந்த செயல்விளக்கம் காட்டப்பட்டது.

அடல் பென்ஷன் திட்டத்தில் வருமானவரி செலுத்துவோருக்கு இடமில்லை: அக்டோபர் முதல் அமலானது

ஏர்டெல் நிறுவனம் சார்பி்ல உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு சிறுமி நேரலையில், சூரிய குடும்பத்தைபற்றி, விர்சுவல் ரியாலிட்டி, அகுமென்டட் ரியாலிட்டி உதவி மூலம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். ஹாலோகிராம் மூலம் தோன்றி, இந்த மாணவி தனது அனுபவங்களை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டார்.

வோடபோன் ஐடியா நிறுவனம், 5ஜி சேவை மூலம் தொழிலாளர்கள் சுரங்கப்பணி மேற்கொள்ளும்போது எவ்வாறு பாதுகாப்பாக செயல்பட முடியும் என்பதை, டெல்லி மெட்ரோ பணியில் சுரங்கப்பாதை அமைப்பில் இருக்கும் தொழிலாளர்கள் மூலம் விளக்கியது. 

மோடியின் தொலைநோக்கு பார்வையால் இந்தியாவை உலகமே வியப்புடன் பார்க்கிறது.. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

டெல்லி பிரகதி மைதானத்தில் 6-வது இந்திய மொபைல் காங்கிரஸையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாடு இன்று முதல் 4ம் தேதிவரை நடக்கிறது. இந்த கண்காட்சியில் ட்ரோன்கள் மூலம் விவசாயத்தை கண்காணிப்பது, அதிகபாதுகாப்பு கொண்ட ரவுட்டர்ஸ், ஏஐ அடிப்படையிலான சைபர் அச்சுறுத்தல் கண்காணிக்கும் கருவி, ஸ்மார்ட் ஆம்புலன்ஸ், வாகனங்களுக்கான தானியங்கி உதவி, ஸ்மார்ட் வேளாண் திட்டம் ஆகியவை குறித்து பிரதமர் மோடிக்கு செயல்விளக்கம் காட்டப்பட்டது.
 

click me!