பக்தர்களே மகிழ்ச்சி செய்தி !! திருப்பதி - திருமலை இடையே 10 பேட்டரி பேருந்து சேவை தொடக்கம்

By Thanalakshmi VFirst Published Sep 28, 2022, 10:38 AM IST
Highlights

திருப்பதி - திருமலை இடையே மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.பிரம்மோற்சவத்தையொட்டி  முதற்கட்டமாக 10 மின்சார பேருந்துகளை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். 
 

திருமலை - திருப்பதியை மையமாக கொண்டு முதல்முறையாக மின்சார பேருந்துகளை ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் தொடங்கி உள்ளது.

பிரம்மோற்சவத்தையொட்டி  முதற்கட்டமாக 10 பேட்டரி பேருந்து சேவையை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் 100 பேருந்துகளை இயக்க ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:tirumala tirupati:மயங்கி விழாதிங்க!திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் சொத்து மதிப்பு என்ன? வெளியானது உண்மை தகவல்

அதன்படி, அலிபிரி பேருந்து நிலையத்திலிருந்து திருப்பதி மலைபாதை சாலையில் 50 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதே போல் ரேனிகுண்டா விமானநிலையத்தில் இருந்து திருமலைக்கு 14 பேருந்துகளும், திருப்பதியில் இருந்து மதனபள்ளிக்கு 12 பேருந்துகளும்,  திருப்பதியில் இருந்து நெல்லூருக்கு 12 பேருந்துகளும் கடப்பாவுக்கு 12 பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு... அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை!!

click me!