நடிகரும், பாஜக எம்.பி.யான ரவி கிஷனிடம் ரூ.3.25 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகரும், பாஜக எம்.பி.யான ரவி கிஷனிடம் ரூ.3.25 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம், கோரக்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாஜக எம்.பி. ரவி கிஷன். இவர் மும்பையைச் சேர்ந்த வர்த்தகர் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயின் ஜிதேந்திர ரமேஷிடம் கடந்த 2012ம் ஆண்டு, கடனாக பணம் வழங்கியுள்ளார்.
சிவசேனா கட்சி விவகாரம்… உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!!
பணத்தை திருப்பித் தருவதாகக் கூறிய ரமேஷ் 12 காசோலைகளை ரவி கிஷனிடம் வழங்கியுள்ளார். ஒவ்வொரு காசோலையின் மதிப்பும் ரூ.34 லட்சமாகும்.
உயிருடன் சமாதியாக முயன்ற சாது: பூமிக்கு அடியில் இருந்து மீட்ட உ.பி. போலீஸார்: வீடியோ
இந்நிலையில் நடிகர் ரவி கிஷன் காசோலைகளில் ஒன்றை கடந்த டிசம்பர் மாதம், எஸ்பிஐ வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். ஆனால், அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
இதையடுத்து, நடிகர் ரவி கிஷன், ஜெயின் ரமேஷிடம் பேச்சு நடத்தி பணம் குறித்து கேட்டுள்ளார். ஆனால், அவரிடம் இருந்து பணத்தை திருப்பித் தருவது குறித்து எந்தவிதமான திருப்திகரமான பதிலும் இல்லை.
அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு எதிராக நோட்டீஸ்: காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை
இதையடுத்து நடிகர் ரவி கிஷனின் மக்கள் தொடர்பு அதிகாரி பவன் துபே கோரக்பூர் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வர்த்தகர் ஜெயின் ரமேஷ் மீது ஐபிசி 406 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.