Popular Front of India: pfi ban:rss: ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்யுங்க ! கேரள காங்கிரஸ் எம்.பி. கொந்தளிப்பு

By Pothy RajFirst Published Sep 28, 2022, 10:35 AM IST
Highlights

இந்து வகுப்புவாதத்தை பரப்பும் ஆர்எஸ்எஸ் அமைப்பையும், பிஎப்ஐ அமைப்பைத் தடை செய்ததுபோல் தடை செய்ய வேண்டும் என்று கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிகுன்னில் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.

இந்து வகுப்புவாதத்தை பரப்பும் ஆர்எஸ்எஸ் அமைப்பையும், பிஎப்ஐ அமைப்பைத் தடை செய்ததுபோல் தடை செய்ய வேண்டும் என்று கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிகுன்னில் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.

தீவிரவாத செயல்களுக்கு துணை செய்தல், நிதி திரட்டுதல் ஆகியவற்றில் ஈடுபடுவதாக புகார் எழுந்ததையடுத்து, 19 மாநிலங்களில் என்ஐஏ அமைப்பினர் இரு கட்டங்களாக பிஎப்ஐ அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.

பாஜக எம்.பி. ரவி கிஷனிடம் ரூ.3.25 கோடி மோசடி: போலீஸார் வழக்குப்பதிவு 

இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், ஆதாரங்களை என்ஐஏ அமைப்பினர் கைப்பற்றினர். 19மாநிலங்களி்ல் இருந்து 200க்கும் மேற்பட்ட பிஎப்ஐ அமைப்பினர், அது தொடர்பான அமைப்பைச் சேர்ந்தவர்கள், தொடர்புள்ளவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதுசார்ந்த அமைப்புகள், துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

பிஎப்ஐ அமைப்பு, துணை அமைப்புகளுக்கு தடை ஏன்? மத்திய அரசின் 10 காரணங்கள்

அதன்படி, “ பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் துணை அணைப்புகளாக ரிஹாப் இந்தியா பவுண்டேஷன்(ஆர்ஐஎப்)தேசிய மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பு(என்சிஹெச்ஆர்ஓ), தேசிய பெண்கள் முன்னணி, ஜூனியர் பிரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன், அனைத்து இந்திய இஸ்லாமிக் கவுன்சில்(ஏஐஐசி), கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா(சிஎப்ஐ) ஆகிய அமைப்புகளுக்கும்” சட்டவிரோத செயல்கள் தடைச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை குறித்து கேரள காங்கிரஸ் எம்.பியும், மக்களவை கொறடாவான கொடிகுன்னில் சுரேஷ் மலப்புரத்தில் இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்வது மட்டும் தீர்வாகாது. எங்கள் கோரிக்கை, இந்து வகுப்புவாதத்தை நாட்டில் பரப்பும், ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்ய வேண்டும்.

பிஎப்ஐ அமைப்பு ஈடுபட்ட குற்றங்கள் என்ன? பட்டியலிடும் மத்திய அரசு

நாடுமுழுவதும் இந்து வகுப்புவாதத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு பரப்புகிறது.  ஆர்எஸ்எஸ் அமைப்பும், பிஎப்ஐ அமைப்பும் ஒன்றாகப் பார்க்கப்பட வேண்டியது அவசியம், இரு அமைப்புகளையும் ஒன்றாக அரசு தடை செய்ய வேண்டும்.  எதற்காக பிஎப்ஐ அமைப்பை மட்டும் மத்திய அரசு தடை செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

click me!