
இந்தியா இந்துக்களுக்கான நாடு. நீண்ட தாடி வைத்தவர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறி பாகிஸ்தான் செல்வதை சிலர் கையாளாகாத தலைவர்கள் தடுத்து விட்டனர் என்று முஸ்லிம்களை மறைமுக விமர்சனம் செய்து பா.ஜனதா எம்.எல்.ஏ. பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. முசாபர் நகர் மாவட்டம், கடாலி நகரில் பா.ஜனதா எம்.எல்.ஏ. விக்ரம் சைனி நேற்று முன் தினம் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார்.
தங்விட்டனர்
அப்போது அவர் கூறுகையில், “ இந்தியா என்பது இந்துக்களுக்கான நாடு. சில தாடி வைத்துக்கொண்டு அலையும் சிலரை(முஸ்லிம்கள்) இந்தியாவில் இருந்து வெளியேறி வேறு நாட்டுக்கு செல்வதை இங்குள்ளகையாளாகாத சில தலைவர்கள் தடுத்துவிட்டனர். அந்த தாடி வைத்தவர்கள் இங்கு ஏராளமான நிலத்தையும், சொத்துக்களையும் வைத்து இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் இங்கு இல்லாவிட்டால், அனைத்தும் நம்முடையதாக இருக்கும்.
சலுகைகள் அனுபவித்தனர்
நான் இந்து என்பது தான் எனக்கு அடையாளம். இது இந்து நாடு. இந்த நாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பெருவாரியான மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற்று அனுபவித்து வருகின்றனர்.
ஆனால், பா.ஜனதா அரசு நமது அரசு, நமக்கான அரசு என்ற கொள்கையில் செயல்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு முந்தைய அரசு பாகுபாட்டுடன் நடத்தி, அரசுக்கு ஆதரவாக இருப்பவர்களை மட்டும் சிறப்பாக நடத்தியது. நீண்ட தாடி வைத்து இருக்கும் சமூகத்தினர் நன்றாக சலுகைகளை அனுபவித்தனர்’’ எனத் தெரிவித்தார்.
திரித்துக்கூறிவிட்டனர்
இவர் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த பேச்சு குறித்து எம்.எல்.ஏ.சைனியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு அவர்பதில் அளிக்கையில், “ நாடு பிரிவினையின் போது நடந்த சம்பவங்கள் குறித்து ஏதும் பேசவில்லை. நீண்ட தாடி வைத்த சிலர் முந்தைய சமாஜ்வாதி அரசில் ஏராளமான சலுகைகளை அனுபவித்தனர் என்றுதான் கூறினேன். என் கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளது. என் பேச்சில் ஒருபகுதி மட்டுமே மக்களிடம் காண்பிக்கப்பட்டு, அதனால்தான் குழப்பம்’’ என்றார்.