Latest Videos

இந்துவா எனக் கண்டறிய டி.என்.ஏ சோதனையா! ரத்த மாதிரிகளுடன் திரண்ட ராஜஸ்தான் மக்கள்!

By SG BalanFirst Published Jun 30, 2024, 4:04 PM IST
Highlights

“அரசியலமைப்புச் சட்டம் எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை அனைவருக்கும் வழங்குகிறது. நாங்கள் எந்த மதத்தையும் எதிர்க்கவில்லை. பாஜக தலைவர்கள் மதவாத அரசியலை நிறுத்த வேண்டும்'' என்று ரோட் னார்.

ஒருவர் இந்திவா என்பதைக் கண்டறிய டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் கூறிய ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவரைக் கண்டித்து, பாரத ஆதிவாசி கட்சியினர் சனிக்கிழமை போராட்டம் நடத்தினர். கட்சியின் தலைவரும், பன்ஸ்வாரா எம்.பி.யுமான ராஜ்குமார் ரோட் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது.

பாரத ஆதிவாசி கட்சி தலைவர் ராஜ்குமார் கோட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்கள் ரத்த மாதிரிகளை கைகளில் பிடித்துக் கொண்டு, திலாவரின் இல்லத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். திலாவரின் வீட்டை முற்றுகையிடச் சென்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்கள் அமர் ஜவான் ஜோதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“மதன் திலாவரின் பேச்சால் மக்கள் பெரும் கோபம் அடைந்துள்ளனர். அவர் ராஜினாமா செய்துவிட்டு மன்னிப்பு கேட்கும் வரை நாங்கள் போராட்டத்தை விடமாட்டோம்” என்று ராஜ்குமார் ரோட் கூறியுள்ளார். அமைச்சர் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார், என்று தெரிவித்த அவர், இந்த விவகாரத்தை மாநில சட்டசபையிலும் எழுப்ப உள்ளதாகவும் பிரதமரிடமும் இது குறித்து முறையிட இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஹரித்வார் வெள்ளத்தில் கொத்துக் கொத்தாக அடித்துச் செல்லப்பட்ட கார், பஸ்கள்! வைரலாகும் வீடியோ!

मंत्री मदन दिलावर के आदिवासी समुदाय के खिलाफ दिए गये DNA वाले अनर्गल बयान के विरोध में जयपुर स्थित अमर शहीद स्मारक पर रखे धरना प्रदर्शन में गंगापुर सिटी विधायक रामकेश मीना, आसपुर विधायक उमेश मीणा, विधायक घनश्यमा मेहर व अन्य सामाजिक कार्यकर्ता पहुंचे। pic.twitter.com/K8qoBRcIUH

— Rajkumar Roat (@roat_mla)

“அரசியலமைப்புச் சட்டம் எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை அனைவருக்கும் வழங்குகிறது. நாங்கள் எந்த மதத்தையும் எதிர்க்கவில்லை. பாஜக தலைவர்கள் மதவாத அரசியலை நிறுத்த வேண்டும்'' என்றும் ரோட் னார். தங்கள் டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்ளும் வகையில் தலைமுடி, நகங்கள் போன்றவற்றை தபால் மூலம் அமைச்சர் திலாவருக்கு அனுப்பப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 21 அன்று, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் மதன் திலாவர் ஒருவர் இந்துவா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள டிஎன்ஏ பரிசோதனை செய்வோம் என்று பேசியிருந்தார். அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு ராஜஸ்தான் மாநில மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரத ஆதிவாசி கட்சியின் துங்கர்பூர் கட்சி எம்எல்ஏ உமேஷ் மீனா மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராம்கேஷ் மீனா (கங்காபூர்) மற்றும் கன்ஷ்யாம் (தோடாபிம்) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இன்ஸ்டால இப்படியும் ஒரு யூஸ் இருக்கா... 18 வருஷத்துக்கு முன் பிரிஞ்சவங்க ஒன்று சேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

click me!