கர்நாடக மாநில தேன் உற்பத்தி செய்யும் விவசாயி மதுகேஷ்வர் ஹெக்டேவுக்கு பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன்கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டுத் தெரிவித்தார்.
கர்நாடக மாநில தேன் உற்பத்தி செய்யும் விவசாயி மதுகேஷ்வர் ஹெக்டேவுக்கு பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன்கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டுத் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் மோடி மன் கி பாத் வாணொலி நிகழ்ச்சியில் மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ஜூலை மாதம் நடந்த 91-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசினார். அப்போது, கர்நாடக மாநிலத்தின் தேனீ வளர்ப்பு விவசாயி மதுகேஸ்வர் ஹெக்டேவுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
pm narendra modi: பிரதமர் மோடியின் சகோதரர் டெல்லியில் தர்ணா போராட்டம் : காரணம் என்ன?
உத்தர கன்னடாவில் இருக்கும் தேனீ விவசாயி மதுகேஸ்வர் ஹெக்டே. இவரின் இயற்கை விவசாயத்தின் திறனைப் பாராட்டி ஏற்கெனவே, ஏசியாநெட் ஸ்வர்னா மற்றும் கன்னடா பிரபா நாளேடு ஆகியவை “நார்த் கர்நாடகா பிஸ்னஸ் அவார்டு” வழங்கியிருந்தது. இப்போது, மதுகேஸ்வர் பிரதமர் மோடியின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஸ்ரீசி தாலுகாவில் உள்ள தாராகுடு கிராமத்தைச் சேர்ந்தவர் மதுகேஸ்வர் ஹெக்டே. இவர் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு தரமான தேனை உற்பத்தி செய்து வருகிறார். கடந்த 35 ஆண்டுகளாக தேனீ வளர்ப்பில் மதுகேஸ்வர் ஈடுபட்டுள்ளார். தனது வீட்டைச் சுற்றி 1.500க்கும் மேலான தேனீ காலணிகளை வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் , முந்திரி விவசாயத்திலும் மதுகேஸ்வர் ஈடுபட்டுள்ளார்.
தனது நிலத்திலும், தனது நண்பர்கள் நிலத்திலும் தேனீ பெட்டிகளை வைத்து மதுகேஸ்வர் வளர்த்து வருகிறார். இதனால் விவசாயமும் வளர்ச்சி அடைந்து வருகிறது, தேனீக்கள் மூலம் வருமானமும் பெருகுகிறது.
sanjay raut: சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கைதுக்கு காரணம் என்ன? பத்ரா சாவல் நிலமோசடி என்றால் என்ன?
தொடக்கத்தில் அரசின் மானியம் பெற்று தேனீ வளர்ப்பில் ஈடுபட்ட மதுகேஸ்வர் தற்போது சிறந்த, வெற்றிகரமான விவசாயியாக மாறிவிட்டார் என்று பிரதமர் மோடியால் பாராட்டப்பட்டுள்ளார்.