முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் மகள் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம் !

By Raghupati R  |  First Published Aug 1, 2022, 6:18 PM IST

Uma Maheshwari : ஆந்திரா முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவ் மகள் உமா மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


என்.டி.ராமாராவ் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர். 1923-ஆம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி ஆந்திர மாநிலத்தில் நிம்மகுரு என்ற ஊரில் பிறந்தார்.  சிறு வயதில் இருந்தே சினிமா ஆர்வம் கொண்டவராக இருந்த என்.டி.ராமாராவ் , எம்.ஜி.ஆரை போலத்தான் 1947-ல் மனதேசம் எனும் தெலுங்கு படத்தில் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார். அதன் பிறகு பை-லிங்குவல் படமாக வெளியான பாதாள பைரவி' படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமடைந்தார். 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

அதன் பிறகு தெலுங்கு சினிமா என்.டி.ஆரை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. 1952-ல் 'கல்யாணம் பண்ணிப்பார்'  என்னும் திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்தின் வெற்றிக்கும் பிறகு என்.டி.ஆர் அசைக்க முடியாத நடிகராக உருவானார்.ஆந்திர மக்கள் இவரை கடவுளாகவே கொண்டாடினர். இன்றளவும் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். பல திரைப்படங்களில் நடித்து தெலுங்கு திரைப்படத்துறைக்கு பெருமை சேர்த்தமைக்காக 1968-ல் பத்மஸ்ரீ விருது என்.டி,ஆருக்கு வழங்கப்பட்டது.

தமிழில் மாயா பஜார், லவகுசா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 1980களில், என்.டி.ராமா ராவ் அவர்கள் திரையுலக வாழ்க்கையில் இருந்து ஓய்வுப் பெற்று, தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். தற்போது சந்திர பாபு நாயுடு தலைவராக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியை 1982 ஆம் ஆண்டு நிறுவியவர் என்.டி.ஆர்தான். 1983 – 1994 காலக்கட்டத்தில் என்.டி.ஆர் மூன்று முறை முதலமைச்சராக இருந்தார். இவர் முதல்வராக இருந்த காலக்கட்டத்தின் சினிமா துறைக்கு ஆற்றிய பங்கு அதிகம். 

மேலும் செய்திகளுக்கு..நீங்க யார் பக்கம்? எடப்பாடி Vs ஓபிஎஸ்.. சசிகலா சொன்ன அந்த பேர்.. அதிர்ச்சியில் நிர்வாகிகள் !

1994 ஆம் ஆண்டு முதல்வரானார்.1995 ஆம் ஆண்டு கட்சியில் நடந்த உள்பூசல் காரணமாக தெலுங்கு தேசம் கட்சி உடைந்தது. என்.டி.ஆரும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து சந்திரபாபு நாயுடு ஓட்டெடுப்பு நடத்தி முதலமைச்சரானார்.  என்டிஆர். மனைவியின் பிரிவிற்கு பிறகு தனது 11 மகன், மகள்கள் மற்றும் முப்பதுக்கும் மேற்ப்பட்ட பேரக்குழந்தைகளுடன் என்டிஆர் வாழ்ந்து வந்தார். 

பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மாரடைப்பால் 1996ம் ஆண்டு ஜனவரி மாதம் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. என்.டி.ராமாராவின் 4-வது மகள் உமா மகேஸ்வரி, ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பங்களாவில் இன்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உமா மகேஸ்வரி சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு..மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. 1 பாட்டில் வாங்கினால், 2 பாட்டில் சரக்கு இலவசம்.! அதிரடி ஆஃபர்

click me!