
கர்நாடகாவில், என்.சி.சி., பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவர்களில் சக மாணவர் ஒருவர் குளத்தில் மூழ்கி உயிர் இழந்ததை கவனிக்காமல், 'செல்பி' எடுப்பதில் ஆர்வத்துடன் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம், ராவகுடுலு என்ற இடத்தில் குந்தன்ஜெயா கோவில் அருகே கடந்த ஞாயிற்று கிழமை, நேஷனல் கல்லூரியின் என்.சி.சி., பிரிவு மாணவர்கள் பயிற்சிக்காக சென்றிருந்தனர்.
அப்போது அருகில் உள்ள ஏரியில் மாணவர்கள் குளித்து கொண்டிருந்தனர். இந்நிலையில், ஏரி குளிக்கச் சென்ற மாணவர்களில் ஒருவர் திடீரென நீரில் மூழ்கினார்.
இதை மற்ற மாணவர்கள் கவனிக்காது செல்பி எடுப்பதில் மும்முரம் காட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் விஷ்வாஸ் என்ற மாணவன் உயிரிழந்துள்ளார். அவர்கள் குளத்து நீரில் தத்தளிக்கும் காட்சி கூட, செல்பி போட்டோவில் பதிவாகியுள்ளது. ஆனால், மற்ற மாணவர்கள் இதை கவனிக்கவில்லை.
தங்கள் தவறை மறைக்க, மாணவர் நிவாஸ் கால் தவறி குளத்தில் விழுந்து இறந்து விட்டார் என கூறினர்.
கல்லூரியில் இருந்த பேராசிரியர்கள், மாணவர்களின் செல்பி போட்டோவை வைத்து உண்மையை கண்டுபிடித்தனர்.
பலியான விஷ்வாஸின் உறவினர்கள் கல்லூரி நிர்வாகத்தின் கவனக்குறைவுதான் இதற்கு காரணம் என்று கூறி அவரது சடலத்தை கல்லூரியின் முன்னால் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவில் தற்போது இந்த மாணவர் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.