சீனாவை புலம்ப வைத்த சுஷ்மா..! பாகிஸ்தான திட்டுனா உங்களுக்கு என்ன வலி?

Asianet News Tamil  
Published : Sep 26, 2017, 09:38 AM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
சீனாவை புலம்ப வைத்த சுஷ்மா..! பாகிஸ்தான திட்டுனா  உங்களுக்கு என்ன வலி?

சுருக்கம்

Sushma lamenting China What is your pain in Pakistan?

ஐநாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திமிராக பேசியதாக சீன ஊடகங்கள் புலம்பி வருகின்றன.

ஐநா பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தானை பந்தாடினார். இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒப்பிட்டு பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார். மருத்துவர்களையும் விஞ்ஞானிகளையும் இந்தியா உருவாக்கி வரும் அதே வேளையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கிவருவதாகவும் விமர்சித்தார்.

பாகிஸ்தானை விமர்சித்ததற்கு பொறுக்க முடியாத சீன ஊடகம், திமிர் பேச்சு என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில், பாகிஸ்தானில் தீவிரவாதம் இருப்பது உண்மைதான். ஆனால் தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதாகவும் ஊக்குவிப்பதாகவும் இந்தியா பேசியுள்ளது. பொருளாதார ரீதியிலும் வெளியுறவு ரீதியிலும் கணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளதால், இந்தியா திமிராக பேசி சுயபெருமை அடித்துக்கொள்கிறது என தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

4.30 மணிநேரத்தில் 19 பீர்.! போட்டிபோட்டு குடித்த ஐடி ஊழியர்கள்.! தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா!
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?