இந்தியாவில் கொரான பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10158 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
கொரோனா பாதிப்பால் உலகமே 3 ஆண்டுகளாக முடங்கிகிடந்தது. இந்த பாதிப்பால் உறவினர்கள், நண்பர்கள் என லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். கொரோனா தடுப்பூசி காரணமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். பள்ளிகளும் மீண்டும் செயல்பட தொடங்கியது. இந்தநிலையில் கடந்த ஓராண்டுக்கு மேல் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் குறைவாகவே நாடு முழுவதும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கடந்த ஒரு சில வாரங்களாக அதிகரிக்க தொடங்கிவிட்டது. நேற்றைய தினம் 7,830 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரங்களை வெளியிட்டுள்ளது.
10 நிமிடத்தில் 1000 பேருக்கு மேல் பலி! ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த நாள் இன்று
10 ஆயிரத்தை கடந்த பாதிப்பு
அதன் படி கடந்த 24 மணி நேரத்தில் 10158 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் 44ஆயிரத்து 998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 230 நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 432 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2489 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே கொரோனா பாதிப்பின் தீவிரத்தால் பொது இடங்கள் அணைத்திலும் முக கவசம் அணிவதற்காக கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகிமாக உள்ள மாநிலங்களில் கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு மாநில அரசிடம் ஆலோசனையும் அறிவுரைகளையும் வழங்கி வருகிறது.
இதையும் படியுங்கள்
பஞ்சாப் துப்பாக்கி சூடு.! தமிழகத்தை சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் பலி- சோகத்தில் உறவினர்கள்