அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ம் தேதி பொது விடுமுறையாக அறிவித்த மத்திய அரசு..!

By vinoth kumar  |  First Published Apr 13, 2023, 9:14 AM IST

அம்பேத்கர் பிறந்த நாளான வரும் ஏப்ரல் 14ம் தேதியை பொது விடுமுறை தினமாக  மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நாளில், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதியை பொது விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்திய அரசியல் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் 1891ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள மோவ் எனும் நகரில் பிறந்தார். இந்திய விடுதலைக்குப் பிறகு நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். குறிப்பாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பிறந்தநாளை ஆண்டு தோறும் ஏப்ரல் 14ம் தேதி மத்திய, மாநில அரசுகள் மரியாதை செலுத்தி கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளான வரும் ஏப்ரல் 14ம் தேதியை பொது விடுமுறை தினமாக  மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நாளில், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே தமிழ்நாடு அரசு அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதியை கடந்த ஆண்டு முதல் சமத்துவ நாள் என்று அறிவித்து, அதன்படி, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

click me!