
ஆந்திராவில் ஆண் என்று கூறி மூன்று பெண்களை திருமணம் செய்த பலே கில்லாடி பெண்னை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஜம்மலமடுகு அருகில் உள்ள இடிகலபாடு கிராமத்தை சேர்ந்தவர் ரமாதேவி.
இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ரமாதேவி ஓடு நூற்பாலையில் வேலை செய்து 17 வயது சிறுமியிடம் நட்பாக பழகியுள்ளார். பின்னர், இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமியை தான் ஆண் என கூறி திருமணமும் செய்துள்ளார்.
திருமணமாக இரண்டே நாட்களில் ரமாதேவி பணி நிமித்தமாக வெளியூர் செல்வதாகக் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமி, தனது பெற்றோருக்கு நடந்த விவரங்களை கூறியுள்ளார்.
இதையடுத்து, ஆண்வேடமிட்டவரைத் தொடர்பு கொண்ட பெற்றோர், ஊரில் திருவிழா இருப்பதாக கூறி ஊருக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து, நேற்று ஜம்மலமடகு கிராமத்திற்கு வந்த அவரைப் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் ஆண் வேடமிட்ட பெண் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
விசாரணையில் ராமதேவி நடை, உடை பாவனைகளில் தன்னை ஆண் போல காட்டிக் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் 2 பெண்களை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் திருமணம் முடிந்த உடன், தனக்கு அவசர வேலைகள் உள்ளதாகவும், விரைவில் சென்னையில் வீடு பார்த்து அழைத்து செல்ல சென்று குடிவைப்பதாகவும் கூறி சென்று விடுவாராம். ஆனால் ரமாதேவி திரும்பி வந்ததே இல்லையாம்.
இதையடுத்து மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட நிர்மலா, ஆண் என்று தன்னை ஏமாற்றி ரமாதேவி மோசடியாக திருமணம் செய்து கொண்டார் என்று ஜம்மல்மடுகு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை பெற்ற போலீசார் ரமாதேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.