
முகநூல் பயநீட்டளர்கள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பதினெட்டு வயதுக்கு முன்பே முகநூலில் போலி அக்கவுண்ட்களை முடக்க, ஆதார் எண்ணை பேஸ்புக் அக்கவுண்டில் இணைக்கும் முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
அதாவது,மொபைல் போனில் புதிய பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்க வேண்டும் என்றால்,கீழே கொடுக்கப்பட்ட ஆப்ஷனில் ஆதார் எண்ணை கேட்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் நாள் ஒன்றுக்கு சுமார் 200 கோடி பயன்பாட்டாளர்களை கொண்டது பேஸ்புக். இதில் பிற நாடுகளை விட இந்தியாவில் தினமும் பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் பேஸ்புக்கில் பல போலியான பெயர்களில் நாளுக்கு நாள், பல லட்சக்கணக்கில் போலியான அக்கவுண்டகள் பயன்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனத்துக்கு பல புகார்கள் சென்றுள்ளது.
அதனால், அந்நிறுவனம் இந்த போலி அக்கவுண்ட்களை தவிர்க்க, புதிதாக அக்கவுண்ட் உருவாக்கும் போது ஆதார் எண்களை இணைக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. மொபைல் மூலம் புதிதாக பேஸ்புக் அக்கவுண்ட் உருவாக்க முயற்சிக்கும் போது தற்போது ஆதார் அட்டையில் உள்ள பெயரை பதிவு செய்யும்படி கேட்கிறது.
"போலி கணக்கு”
போலிக் கணக்குகளால் முகநூல் பயனீட்டாளர்கள் அதிகமாக சிரமத்துக்கு உள்ளாவதால், புதிய முகநூல் கணக்கு தொடங்கும்போதே "ஐ.டி ப்ரூப்" காலம் ஒன்று இருக்கும் அதில் அடையாள அட்டையை போட்டோ எடுத்து பதிவேற்றம் செய்தால் மட்டுமே உங்கள் கணக்கு சரியானது என்று உள்ளே அனுமதிக்கும். அந்த அடையாள அட்டையும் தற்போது போலியாக உருவாக்கி போலி கணக்குகளை உருவாக்குகிறார்கள். இதனை தடுக்க இந்த அரசால் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள ஆதார் கார்டு கொண்டு போலி கணக்குகளை முடக்க மும்மரமாகியுள்ளது.