ஏழை விளிம்புநிலை மக்கள் ஊழலின் தாக்கத்தை உணர்கிறார்கள்: ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

By SG BalanFirst Published Aug 12, 2023, 11:07 AM IST
Highlights

வெளிநாட்டு சொத்துக்களை விரைவாக மீட்பதற்காக, தண்டனை இல்லாத பறிமுதல் முறையை ஜி20 நாடுகள் உருவாக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் நடைபெறும் ஜி20 ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். அப்போது, ஊழலின் தாக்கம் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களால் உணரப்படுகிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.

"ஊழலுக்கு எதிராக இந்தியா கடுமையாகப் போராடி வருகிறது. ஊழலுக்கு எதிராக போராடுவது மக்களுக்கு ஆற்றவேண்டிய புனிதமான கடமை. ஊழலின் தாக்கத்தை ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களிடம் அதிகமாகக் காணமுடிகிறது" என்றும்  பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார்: ஊட்டியில் தோடர் பழங்குடி மக்களுடன் சந்திப்பு

VIDEO | “We have simplified various procedures for businesses. Automation and digitisation of government services have eliminated rent-seeking opportunities,” says PM Modi in his virtual address at the G20 Anti-Corruption Working Group's third and final meeting being held in… pic.twitter.com/lgyfFuoSg1

— Press Trust of India (@PTI_News)

வணிகத்துக்கான பல்வேறு நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளதாகச் சொன்ன அவர், அரசு சேவைகளில் தானியங்கி முறை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் அதிக அளவில் கொண்டுவரப்பட்டுள்ளது என்று எடுத்துரைத்தார். மேலும், வெளிநாட்டு சொத்துக்களை விரைவாக மீட்பதற்காக, தண்டனை இல்லாத பறிமுதல் முறையை ஜி20 நாடுகள் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் அது உலகிற்கே முன்மாதிரியாக இருக்கும் எனவும் தப்பியோடிய குற்றவாளிகள் நாடு திரும்புவதை உறுதி செய்யும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

"சட்ட அமலாக்க முகமைகளுக்கு இடையே முறைசாரா ஒத்துழைப்பில் ஒரு புரிந்துணர்வு எட்டப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தப்பியோடும் குற்றவாளிகள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்துவதை இது தடுக்கும். சரியான நேரத்தில் அவர்களின் சொத்து மற்றும் வருமானத்தை அடையாளம் காண்பதும் முக்கியமானது. அதே நேரத்தில் உள்நாட்டு சொத்து மீட்பு வழிமுறைகளை மேம்படுத்துவமையும் ஊக்குவிக்க வேண்டும்" என்றும் பிரதமர் கூறினார்.

"2018ஆம் ஆண்டு பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தை இயற்றினோம். அதற்குப் பின் 1.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை மீட்டிருக்கிறோம். பணமோசடி தடுப்பு நடவடிக்கைகளில் 2014ஆம் ஆண்டில் இருந்து 12 பில்லியன் டாலருக்கும் மேல் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செவ்வாய் கிரகத்தின் கேல் பள்ளத்தில் தண்ணீர் இருந்திருக்கும்... நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய ஆதாரம்!

click me!