இப்படியொரு புருஷனா? கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்! நண்பர்களுக்கு பிரியாணி மது விருந்து கொடுத்து கொண்டாடிய கணவர்

By vinoth kumar  |  First Published Oct 8, 2023, 3:41 PM IST

கேரளா மாநிலம் கோழிக்கோட்டு வரகரையை சேர்ந்தவர் 40 வயது வாலிபர். இவருக்கு திருமணமாகி மனைவி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், மனைவிக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 


கள்ளக்காதலனுடன் மனைவி ஓடிவிட்டதை அறிந்த கணவர் சுமார் 250 நண்பர்களுக்கு பிரியாணி மற்றும மது விருந்து அளித்து நடனமாடி மகிழ்ந்தார். 

கேரளா மாநிலம் கோழிக்கோட்டு வரகரையை சேர்ந்தவர் 40 வயது வாலிபர். இவருக்கு திருமணமாகி மனைவி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், மனைவிக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துதுள்ளனர். 

Tap to resize

Latest Videos

நாளடைவில் இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவி  கள்ளக்காதலனுடன் ஓடி சென்றது தெரியவந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார். 

இதிலிருந்து விடுபட தனது நண்பர்களுடன் கொண்டாட முடிவு செய்து, வீட்டில் சுமார் 250 ஆண்களுக்கு பிரியாணி, மதுபானத்துடன் விருந்து கொடுத்து நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகலைதளங்களில் வைரலாகி வருகிறது.

click me!