இது தண்ணீர் நிரம்பிய சாலை; ஜிபிஎஸ் தவறால் ஆற்றில் மூழ்கி மருத்துவர்கள் பலி!

By Manikanda Prabu  |  First Published Oct 8, 2023, 2:20 PM IST

தண்ணீர் நிரம்பிய சாலை என்று ஜிபிஎஸ் தவறாக காட்டியதால் ஆற்றில் மூழ்கி மருத்துவர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்


இன்றைய தொழில்நுட்ப உலகில் அனைவரும் செல்போனில் ஜிபிஎஸ் உதவியுடன் இயங்கும் மேப் பார்த்துதான் செல்கிறார்கள். ஆனால், சில சமயங்களில் அது தவறான பாதையை காட்டி விடும். ஆனால் ஜிபிஎஸ் தவறு, கேரளாவில் மருத்துவர்கள் இரண்டு பேரின் உயிரை பறித்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் இரண்டு மருத்துவர்களை ஏற்றிச் சென்ற கார் பெரியாறு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நள்ளிரவு 12:30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அத்வைத் (29), அஜ்மல் (29) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். சம்பவத்தன்று அவர்கள் இருவரும் காரில் கொடுங்கல்லூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். கூகுள் மேப்பில் லோகேஷன் போட்டு அவர்கள் வந்ததாக கூறப்படுகிறது.

Latest Videos

undefined

ஆனால், தண்ணீர் நிரம்பிய சாலை என்று ஜிபிஎஸ் தவறாக காட்டியதால் பெரியாறு ஆற்றில் அவர்கள் வந்த கார் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில், அத்வைத் மற்றும் அஜ்மல் ஆகியோரால் தப்பிக்க முடியவில்லை. காரில் பயணித்த மற்ற மூன்று பயணிகளும் காயங்களுடன் வெளியேறினர். 

உடனடியாக அப்பகுதி மக்கள் விரைந்து வந்து தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். ஸ்கூபா டைவிங் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது. உள்ளூர்வாசிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் நீரில் மூழ்கிய காரில் இருந்து 3 பேர் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது! இந்திய விமானப் படைக்கு புகழாரம் சூட்டிய ஆனந்த் மஹிந்திரா

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “சம்பவத்தன்று கனமழை காரணமாக சாலை சரியாக தெரியாமல் இருந்துள்ளது. அவர்கள் கூகுள் மேப் காட்டிய வழியைப் பின்பற்றி வந்துள்ளனர். ஆனால் வரைபடங்கள் பரிந்துரைத்தபடி இடதுபுறம் திரும்புவதற்குப் பதிலாக தவறுதலாக முன்னோக்கிச் சென்றது போல் தெரிகிறது. ஆனால் இடதுபுறம் திரும்புவதற்குப் பதிலாக மேப் பரிந்துரைத்தபடி தண்ணீர் நிரம்பிய சாலை என தவறுதலாக முன்னோக்கிச் சென்றது போல் தெரிகிறது. இதனால் ஆற்றில் கார் கவிழ்ந்துள்ளது.” என தெரிவித்துள்ளனர்.

click me!