100-வது பிறந்த நாளில் தாயார் சொன்ன விஷயம் எப்போதும் ஞாபகம் இருக்கும்! அப்படி என்ன சொன்னார்? பிரதமர் டுவீட்..!

By vinoth kumarFirst Published Dec 30, 2022, 8:33 AM IST
Highlights

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (100) வயது மூப்பு காரணமாக திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா நெஞ்சக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவ்வப்போது, அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. 

ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது என தாயார் ஹீராபென் மறைவை அடுத்து பிரதமர் மோடி உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (100) வயது மூப்பு காரணமாக திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா நெஞ்சக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவ்வப்போது, அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடம் தாயாரின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். இந்நிலையில், திடீரென அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து இன்று அதிகாலை பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உயிரிழந்தார். 

100வது பிறந்தநாளில் எனது தாயார் சொன்ன விஷயம், எப்போதும் நினைவில் இருக்கும் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை தனது தாயாரிடம் உணர்ந்தேன்.

100வது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க. அதாவது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்பதே. இது எப்போதும் நினைவில் இருக்கிறது என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

click me!