தனக்கு சனாதன தர்மத்தின் மீது மதிப்பு உள்ளதாவும் உதயநிதி ஸ்டாலினுக்கு சனாதன தர்மத்தைப் பற்றி தெரியாமல் இருக்கலாம் என்றும் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் மம்தா பானர்ஜி, தான் சனாதன தர்மத்தை மதிப்பதாகவும், உதயநிதி ஸ்டாலின் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளார். அண்மையில், சனாதன தர்மத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதை அடுத்து மம்தாவின் இந்த அட்வைஸ் வந்திருக்கிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கோரோனாவுடன் ஒப்பிட்டு, அதை ஒழிக்க வேண்டும் என்று சனிக்கிழமை கூறினார். அவரது கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது, ஆனால் அவர் தனது வார்த்தைகளில் உறுதியாக இருப்பதாகவும் சனாதன தர்மம் சாதிவெறி மற்றும் சமத்துவமின்மையை ஊக்குவிப்பதால் அதனை சமூகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் கூறினார்.
இந்நிலையில் திங்கட்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் மேற்குவங்க முதல்வர் மம்தா, "தமிழ்நாடு, தென்னிந்திய மக்கள் மற்றும் ஸ்டாலின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் அவர்களுக்கு எனது பணிவான கோரிக்கை என்னவென்றால், ஒவ்வொரு மதத்திற்கும், தனித்தனியான உணர்வுகள் உள்ளன. இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி 9 வருஷமா ஒரு நாள் கூட லீவு எடுக்கலயாம்! உழைத்துக்கொண்டே இருக்கிறாராம்!
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து மதங்களையும் மதித்து, சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
"சித்திவிநாயகர் கோயில் மகாராஷ்டிராவிலும், நாடு முழுவதும் மிகவும் பிரபலமானது. இதேபோல், துர்கா பூஜையும் பிரபலமானது. நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்தமானது. நாம் கோவிலுக்கும், மசூதிக்கும், தேவாலயங்களுக்கும் செல்கிறோம். எந்தப் பிரிவினரையும் புண்படுத்தும் விஷயத்தில் ஈடுபடக்கூடாது" என்று மம்தா குறிப்பிட்டார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்கலாம் என்று கூறிய மம்தா, "...ஆனால் என் தரப்பில் இருந்து, அவர்கள் எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும் என்ற ஆலோசனையை தான் என்னால் கொடுக்க முடியும்" எனவும் குறிப்பிட்டார்.
திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், இதுபோன்ற கருத்துகளை தங்கள் கட்சி கண்டிக்கிறது என்றார். "நல்லிணக்கமே நமது கலாச்சாரம். மற்ற மதங்களை நாம் மதிக்க வேண்டும். இதுபோன்ற கருத்துகளுக்கும் இந்தியா கூட்டணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் யாராக இருந்தாலும், யாராவது இப்படிச் சொன்னால், இதுபோன்ற அறிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம்" என்று கோஷ் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு! ஆவேசமான உ.பி. சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா!