மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் தேவையான நிதி என்னிடம் இல்லை என்பதால் பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை நிராகரித்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் தேவையான நிதி என்னிடம் இல்லை என்பதால் பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை நிராகரித்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா தன்னை ஆந்திரா அல்லது தமிழ்நாட்டில் போட்டியிடுமாறு ஆலோசனை தெரிவித்தார் என்றும் அவர் கூறியுள்ளார். புதன்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஒரு வாரம், பத்து நாள் யோசிச்சிட்டு, போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்தேன். போட்டியிடற அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. ஆந்திரா, தமிழ்நாட்டா என்று எனக்கு ஒரு பிரச்சனை இருந்தது. எனவே என்னால் அதைச் செய்ய முடியாது என்று நான் கூறினேன்" என்று அவர் கூறினார்.
"அவர்கள் எனது வாதத்தை ஏற்றுக்கொண்டதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அதனால்நான் போட்டியிடவில்லை," என்று அவர் கூறினார். நாட்டின் நிதியமைச்சராக இருப்பவரிடம் தேர்தலில் போட்டியிட போதுமான நிதி இல்லையா என்று கேட்டபோது, "இந்தியாவுக்கே சொந்தமான நிதி தனக்குச் சொந்தமானது அல்ல" என்று கூறினார்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கில் எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை கேட்டு நீதிமன்றம் உத்தரவு!
"எனது சம்பளம், எனது சம்பாத்தியம் மற்றும் எனது சேமிப்பு ஆகியவைதான் என்னுடையது. இந்தியாவின் நிதி என்னுடையது அல்ல" என்று அவர் விளக்கினார்.
பாஜக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடக்கும் மக்களவைத் தேர்தலில் ஏற்கனவே பல ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ள எல்.முருகனை நிறுத்தியுள்ளது. இவர்களைப் போல பியூஷ் கோயல், பூபேந்தர் யாதவ், ராஜீவ் சந்திரசேகர், மன்சுக் மாண்டவியா மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கும் பாஜக சீட் கொடுத்துள்ளது. சீதாராமன் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். ஆனால் தேர்தலில் போட்டியிடவில்லை.
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மற்ற வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். "நான் நிறைய ஊடக நிகழ்வுகளில் கலந்துகொள்வேன். வேட்பாளர்களுடன் பரப்புரைக்குச் செல்வேன். நாளை ராஜீவ் சந்திரசேகரின் பிரச்சாரத்திற்கு செல்வேன். நான் பிரச்சாரத்தில் பங்கெடுத்துக்கொள்வேன்" என்றும் அவர் கூறினார்.
குழியில் தள்ளிய பாஜக... நாட்டை மீட்க இந்தியா கூட்டணி ஆட்சி வரவேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு