ரூபாய் நோட்டுக் குவியலில் தூங்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசியல்வாதி!

By Manikanda Prabu  |  First Published Mar 27, 2024, 8:36 PM IST

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசியல்வாதி ஒருவர் ரூபாய் நோட்டுக் குவியலில் தூங்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது


அசாம் மாநிலத்தை சேர்ந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசியல்வாதி ஒருவர் ரூபாய் நோட்டுக் குவியலில் தூங்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அம்மாநிலம் ஊடல்கிரி மாவட்டத்தில் உள்ள பைரகுரியில் கிராம சபை வளர்ச்சிக் குழுவின் தலைவரான பெஞ்சமின் பாசுமாத்ரி என்பவர், ரூ.500 நோட்டுகள் சிதறிக்கிடக்கும் படுக்கையில் தூங்கிக் கொண்டிருப்பது போன்று அந்த புகைப்படத்தில் உள்ளது. அவர் மீதும் சில ரூபாய் நோட்டிகள் சிதறிக் கிடக்கின்றன.

போடோலாந்து பிராந்தியத்தை சேர்ந்த அரசியல்வாதியான அவர், பிரதமரின் வீட்டு வசதி திட்டம் மற்றும் ஊரக வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்டவற்றில் முறைகேடில் ஈடுபட்டதாக ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஏழை பயனாளிகளிடமிருந்து அவர் லஞ்சம் பெற்றதாக புகார்கள் உள்ளன.

Tap to resize

Latest Videos

Loksabha Election 2024: தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் நிறைவு!

பெஞ்சமின் பாசுமாத்ரி, ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற போடோலாந்தை தளமாகக் கொண்ட ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (UPPL) கட்சியை சேர்ந்தவர் என்பதால் இந்த புகைப்படம் அக்கட்சிக்கு தேர்தல் நேரத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், பெஞ்சமின் பாசுமாத்ரி கட்சியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டதாக UPPL தலைவரும், போடோலாந்து டெரிடோரியல் கவுன்சிலின் (BTC) தலைமை நிர்வாக உறுப்பினருமான பிரமோத் போரோ இந்த புகைப்படம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். “பெஞ்சமின் பாசுமாத்ரியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஜனவரி 10, 2024 அன்று கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால் கட்சிக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம், கட்சியின் ஹரிசிங்க பிளாக் கமிட்டியிடம் இருந்து ஜனவரி 5 ஆம் தேதி பெற்ற அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், அவரை கட்சியுடன் தொடர்புப்படுத்த வேண்டாம் எனவும், அவரது செயல்களுக்கு அவரே பொறுப்பானவர் எனவும் பிரமோத் போரோ கேட்டுக் கொண்டுள்ளார்.

click me!