எனது தாயின் மரியாதைக்காக இதுபோன்ற ஆயிரம் வேலைகளை இழக்கலாம் என நடிகை கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் தெரிவித்துள்ளார்
மக்களவைத் தேர்தல் 2024இல் இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் கன்னத்தில் அறைந்துள்ளார்.
சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் நடைபெற்ற வாக்கு வாதத்தில், பெண் காவலர் குல்விந்தர் கவுர் கங்கனா ரனாவத்தை அறைந்துள்ளார். விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனாவின் கருத்துக்களால் ஆத்திரமடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர் அவரை அறைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளா கங்கனா ரனாவத், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், பாதுகாப்பு சோதனையின் போது இந்த சம்பவம் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளின் போராட்டம் தொடர்பான பிரச்சினையில் தன்னை அந்த பெண் காவலர் அறைந்ததாக தெரிவித்ததாகவும் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
வேளான் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டங்கள் குறித்து 2020ஆம் ஆண்டில் கங்கனா ரனாவத் தெரிவித்த கருத்துக்காக குல்விந்தர் கவுர் அவரை அறைந்துள்ளார்.“விவசாயிகள் ரூ.100 வாங்கிக் கொண்டு போராடுவதாக கங்கனா ரனாவத் தெரிவித்தார். அவர் அதுபோன்று செய்வாரா? இந்த கருத்தை அவர் தெரிவித்த போது எனது தாயார் அங்கு போராடிக் கொண்டிருந்தார்.” என குல்விந்தர் கவுர் தெரிவித்துள்ளார்.
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி!
இந்த சம்பவம் தொடர்பாக குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், தனது தாயின் மரியாதைக்காக இதுபோன்ற ஆயிரம் வேலைகளை இழக்கலாம் என நடிகை கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் குல்விந்தர் கவுர் தெரிவித்துள்ளார்.
मुझे नौकरी की फिक्र नहीं है,
मां की इज्जत पर ऐसी हजारों नौकरियां कुर्बान है- कुलविंदर कौर
இதுகுறித்து குல்விந்தர் கவுர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த வேலையை இழப்பது பற்றி எனக்கு பயம் இல்லை. எனது அம்மாவின் மரியாதைக்காக இதுபோன்ற ஆயிரக்கணக்கான வேலைகளை இழக்கவும் தயாராக இருக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார். இதனிடையே, கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு பலரும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.