ராகுல் காந்தி சொல்வதைக் கேட்க நான் தயார்... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுவது என்ன?

By Narendran S  |  First Published Feb 23, 2023, 12:27 AM IST

சீனாவுடனான எல்லைப் பிரச்சனையில் ராகுல் காந்தி கருத்து சிறந்ததாக இருந்தால் அதை கேட்க தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 


சீனாவுடனான எல்லைப் பிரச்சனையில் ராகுல் காந்தி கருத்து சிறந்ததாக இருந்தால் அதை கேட்க தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனாவுக்கான தூதராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளேன். இந்திய - சீன எல்லைப் பிரச்னைகளை பல ஆண்டுகளாக கையாண்ட அனுபவம் எனக்கு உள்ளது. அதற்காக நான் மிகவும் அறிவாளி என்று கூறவில்லை. ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய புரிதல் என்னிடம் உள்ளது.

இதையும் படிங்க: தமிழகம் உள்ளிட்ட13 மாநிலங்களில் உள்கட்டமைப்பு திட்டங்கள்… விரைந்து முடிக்க பிரதமர் மோடி உத்தரவு!!

Tap to resize

Latest Videos

சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் ராகுல் காந்தி கருத்து சிறந்ததாக இருந்தால், அதை கேட்க நான் தயாராக இருக்கிறேன். நான் ஏற்கனவே சொன்னது போல, எனது வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாக கொண்டது. அதனால் எனது மனதில் உள்ளதை கூறுகிறேன். எதையும் மூடி மறைக்கவில்லை. சீனப் படைகளுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில், அங்கு கூடுதல் படைகளை பிரதமர் மோடி அனுப்பிவைத்தார். ராகுல் காந்தி அனுப்பவில்லை.

இதையும் படிங்க: ஸ்கூட்டி விலை ரூ.90 ஆயிரம்.. ஆனா வண்டி நம்பர் விலை ரூ.1.12 கோடி - யார்ரா நீங்கல்லாம்.?

1962 ஆம் ஆண்டில் நடந்த போருக்குப் பிறகும், குறிப்பிட்ட பகுதியை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. அவர்கள் வேண்டுமென்றே எல்லையை ஆக்கிரமித்துள்ளனர். அதற்கான காரணங்களை காட்டுகின்றனர். சீனர்கள் முதன்முதலில் 1958 ஆம் ஆண்டில் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் 1962ல் குறிப்பிட்ட பகுதியை கைப்பற்றினர். சீன விவகாரத்தில் தற்போது அமைதி நிலவுகிறது என்று தெரிவித்துள்ளார். 

click me!