
கடந்த 10 ஆண்டுகளாக தாம்பத்ய உறவுக்கு மறுத்து, மனரீதியாக கொடுமைப் படுத்திய கணவனுக்கு விபரீத தண்டனை அளித்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கொடுமை
உத்தரப்பிரதேசம், புலந்தசாகர் சேர்ந்த தம்பதி காசியாபாத் நகரில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு கடந்த 2006ம் ஆண்டு திருமணமானது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பெண்ணுடன், கணவர் தாம்பத்ய உறவில் ஈடுபடாமல், தொடர்ந்து மனரீதியாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
‘நறுக்’
இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண், நேற்று முன் தினம் கணவர் குளித்து விட்டு வரும்போது, அவர் மீது தாக்குதல் நடத்தி, கத்தியால், அவரின் ஆணுறுப்பை நறுக்கிவிட்டார்.
வாக்குமூலம்
இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அந்த பெண் அளித்த வாக்கு மூலம் குறித்து போலீஸ் ஆய்வாளர் அணில் குமார் கூறுகையில், “ அந்த பெண்ணை, அவரின் கணவர் கடந்த 10 ஆண்டுகளாக மனரீதியாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
அந்த பெண்ணுடன்தாம்பத்திய உறவிலும் ஈடுபடவில்லை, குழந்தையும் பெற்றுக்கொள்ளவில்லை. தனது கணவரின் நடவடிக்கை கண்டு அந்த பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
மனஉளைச்சல்
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், கணவர் குளித்துவிட்டு வரும் போது, சமையல் அறையில் பயன்படுத்தும் கத்தியால் கணவரின் ஆணுறுப்பை வெட்டிவிட்டார்.
வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து தனது கணவர் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால், தன்னிடம் மட்டும் உடல்ரீதியான உறவுக்கு தொடர்ந்து மறுத்துள்ளார் எனவும் தெரிவித்தார்.
சகோதரிகளிடம் தவறு
மேலும், அந்த பெண்ணை தாக்கி, அந்த பெண்ணின் சகோதரிகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். இதனால், ஆத்திரமடைந்து இவ்வாறு செய்தேன் என தெரிவித்தார் '' என்றார்.
இது தொடர்பாக அந்த பெண் மீது கோடா போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்து
தாக்குதலால் பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு காசியாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்ட அந்த நபரின் சகோதரர் கூறுகையில், “ என் சகோதரருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.ஆனால், தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்'' என்றார்.