அந்தர்பல்டி அடித்த Paytm - 2 % கட்டணத்தை வாபஸ் பெற்றது

 
Published : Mar 10, 2017, 04:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
அந்தர்பல்டி அடித்த Paytm -  2 % கட்டணத்தை வாபஸ் பெற்றது

சுருக்கம்

The last 2 days before the introduction of the fee charged by the state of the project yesterday U-turn has turned paytm

கிரெடிட் கார்டு மூலம் பே-டிஎம் ‘மொபைல் வாலட்’டில் ‘டாப் அப்’ செய்தால் 2 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும் என்ற முடிவை ‘பே-டிஎம்’ நிறுவனம் நேற்று திடீரென வாபஸ் பெற்றது.

கடந்த 2 நாட்களுக்கு முன் இந்த கட்டணம் விதிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்த நிலையில், நேற்று ‘யு-டர்ன்’ அடித்துள்ளது பே-டிஎம்.

ரூபாய் நோட்டு தடை கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி  அறிவிக்கப்பட்டதும், ‘பே-டிஎம்’ நிறுவனம்டிஜிட்டல் பரிமாற்றத்தை மக்கள் மத்தியில் ஊக்கப்படுத்தியது.  சிறுவணிகர்கள் கட்டணம் இன்றி பணத்தை வாடிக்கையாளர்களிடம் பரிமாற்றம் செய்ய அனுமதித்தது.

ஆனால், ‘பே-டிஎம்’ பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சிலர் தங்கள் கிரெடிட் கார்டுகள் மூலம் ‘மொபைல் வாலட்டை’ ‘டாப் அப்’ செய்து கொண்டு, அந்த பணத்தை எந்தவிதக் கட்டணம் இன்றி, தங்கள் வங்கிக்கணக்குக்கு மாற்றி வருகின்றனர் என்பதை ‘பே-டிஎம்’ நிறுவனம் கண்டுபிடித்தது. இதையடுத்து கிரெடிட் கார்டு மூலம் டாப்-அப் செய்பவர்களுக்கு 2 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும் என கடந்த 8-ந்தேதி அறிவித்தது.

ஆனால், பே-டிஎம் நிறுவனங்களுக்கு போட்டியான ‘மொபிவிக்’ உள்ளிட்ட சில நிறுவனங்கள்மொபைல் வாலட்டுக்கு கட்டணம் இல்லாமல் சேவையை தொடர்ந்து செய்துவருவதால், ‘பே-டிஎம்’நிறுவனத்துக்கு கடும் பின்னடைவு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, கட்டணம் விதிக்கும் முடிவை 2 நாட்களில் திரும்பப் பெற்றுள்ளது பே-டிஎம்.

இது குறித்து பே-டிஎம் நிறுவனத்தின் துணைத் தலைவர் தீபக் அபாட் கூறுகையில், “ லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், வர்த்தகர்கள் நலன்தான் முக்கியம். ஆதலால், கிரெடிட்கார்டுகள் மூலம் நடக்கும் பரிமாற்றத்துக்கு விதிக்கப்பட்ட 2 சதவீதம் கட்டணத்தை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. 

எங்களுடைய முன்னுரிமை என்பது எப்போதுமே வாடிக்கையாளர்கள் நலன் மட்டுமே.  அவர்கள் ‘பே-டிஎம்’ பயன்படுத்துவதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். லட்சக்கணக்கான இந்தியர்களை டிஜிட்டல் பரிமாற்றத்துக்குள் கொண்டு வர முயற்சிப்போம்'' எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்