பாஸ்போர்ட்டை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டியது அவசியம். https://www.passportindia.gov.in/ என்ற பாஸ்போர்ட் சேவா இணையதளம் மூலம் ஆன்லைனில் புதுப்பிக்கலாம்.
பாஸ்போர்ட் என்பது ஒரு மெய்நிகர் ஆவணமாகும். இது தேசிய அடையாளத்தின் ஆதாரமாக அறியப்படுகிறது. விடுமுறை, வேலை அல்லது கல்விக்காக வேறு நாட்டிற்குச் செல்ல பாஸ்போர்ட் தேவை. பாஸ்போர்ட்டை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
பாஸ்போர்ட்டை எப்போது புதுப்பிக்க வேண்டும்?
பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலம் முடிவதற்கு 9 மாதங்களுக்கு முன்பே புதுப்பிக்க வேண்டும். 18 வயதுக்கு குறைவாக இருந்தால், பாஸ்போர்ட்டை 5 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஆன்லைனில் எளிதாக அதனைப் புதுப்பிக்க முடியும்.
தேவையான ஆவணங்கள் எவை?
தற்போதைய பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்க நகல், ECR / ECR அல்லாத பக்கத்தின் சுய சான்றளிக்கப்பட்ட நகல், முகவரி சான்றின் நகல், நீட்டிப்பு பக்கத்தின் நகல், கண்காணிப்புப் பக்கத்தின் நகல் முதலிய பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பித்து பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டும்.
ஆண்டுக்கு ரூ.436 செலுத்தினால் ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் மத்திய அரசின் பீமா யோஜனா காப்பீடு!
பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க கட்டணம் எவ்வளவு?
ஆ10 ஆண்டுகள் செல்லுபடியாகும் 36 பக்க பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க ரூ.1500 கட்டணம் செலுத்த வேண்டும். தட்கலுக்கு ரூ.2000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் 60 பக்க பாஸ்போர்ட்டுக்கு ரூ.2000 கட்டணம் பெறப்படுகிறது. தட்கலுக்கு ரூ.2000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
18 வயதுக்கு கீழ் இருந்தால், 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் 36 பக்க பாஸ்போர்ட்டுக்கு ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். தட்கலுக்கு ரூ.2000. 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் 36 பக்க பாஸ்போர்ட்டுக்கு ரூ.1500 கட்டணம் செலுத்த வேண்டும். தட்கலுக்கு கட்டணம் ரூ.2000.
ஆன்லைனில் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது எப்படி?
பாஸ்போர்ட்டை ஆன்லைனில் புதுப்பிக்க, தேவையான அனைத்து ஆவணங்கள் அனைத்தையும் தயாராக வைத்துக்கொண்டு, https://www.passportindia.gov.in/ என்ற பாஸ்போர்ட் சேவா இணையதளத்தைப் பார்வையிடவும். லாக்இன் செய்த பிறகு, பாஸ்போர்ட் புதுப்பிப்புக்கான Re-issue of Passport என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
பின்னர் பணம் செலுத்துதல் மற்றும் அட்டவணை விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். கட்டணத்தைச் செலுத்தி படிவத்தைச் சமர்ப்பிக்கவும். விண்ணப்பத்தை பிரிண்ட் செய்து வைத்துக்கொள்ளவும். அனைத்து ஆவணங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்துடன் குறிப்பிட்ட தேதியில் அருகிலுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவிற்குச் செல்லவும்.
அப்ப கூலித் தொழிலாளி... இப்ப லட்சாதிபதி! ஐசக் முண்டாவின் வாழ்க்கையை மாற்றிய யூடியூப் சேனல்!