பரவிவரும் இந்த ஆபத்தான ஆடியோ கிளிப்பை முன்வைத்து, சமூக ஊடகங்களில் பாகிஸ்தானில் உள்ளதாகக் கூறிக்கொள்ளும் தனிநபர்கள், இந்தியாவிற்குள் கொந்தளிப்பை உருவாக்க விவசாயிகளின் போராட்டத்தை பயன்படுத்திக்கொள்வது பற்றி விவாதிக்கின்றனர்.
சமூக ஊடகங்களின் பரவி வரும் ஒரு குழப்பமான ஆடியோ கிளிப் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு பிரச்சனைகளைத் தூண்டும் நோக்கத்துடன், பாகிஸ்தானைச் சேர்ந்த சக்திகள் இந்திய விவசாயிகள் போராட்டத்தை வைத்து சதித்திட்டம் வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவிற்குள் குழப்பம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடந்துவரும் விவசாயிகளின் போராட்டத்தை பயன்படுத்த முயற்சி நடக்கிறதா என்ற சந்தேகத்தை இந்த ஆடியோ கிளிப் எழுப்புகிறது.
பரவிவரும் இந்த ஆபத்தான ஆடியோ கிளிப்பை முன்வைத்து, சமூக ஊடகங்களில் பாகிஸ்தானில் உள்ளதாகக் கூறிக்கொள்ளும் தனிநபர்கள், இந்தியாவிற்குள் கொந்தளிப்பை உருவாக்க விவசாயிகளின் போராட்டத்தை பயன்படுத்திக்கொள்வது பற்றி விவாதிக்கின்றனர்.
எல்லாருக்கும் மாதம்தோறும் ரூ.5000 கிடைக்கும்! போஸ்ட் ஆபீஸ் வழங்கும் மாத வருவாய் திட்டம்!
Social Media is a big weapon. is best for Khalistanis to ignite problems for India & Govt - Audio clip of Pakistan based agents strategising on how to create chaos inside India.pic.twitter.com/o5ilm3zQy4
— Megh Updates 🚨™ (@MeghUpdates)இந்த ஆடியோ கிளிப்பில் உள்ள அடையாளம் தெரியாத நபர், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் விவசாயிகள் போராட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தூண்டுவதையும், இந்தியாவில் குழப்பத்தை தூண்டுவதற்கும், நாட்டின் உள்விவகாரங்களை சீர்குலைப்பதற்கும் இது ஒரு சிறந்த தருணம் என்று வலியுறுத்துவதையும் கேட்க முடிகிறது.
இருப்பினும், வைரலாகிவரும் ஆடியோவின் நம்பகத்தன்மையை ஏசியாநெட்நியூஸ் தமிழ் உறுதிபடுத்த முடியவில்லை.
மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஷ் கோயல் மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோர் சண்டிகரில் விவசாயத் தலைவர்களுடன் நான்காவது சுற்று கலந்துரையாடலுக்கு தயாராக உள்ளனர். பிப்ரவரி 8, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் முந்தைய சுற்று பேச்சுக்கள் இருந்தபோதிலும் முக்கிய கோரிக்கைகளில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
கோவையில் பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் ஓட்டம்: 5,000 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு