காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரம் ஏற்படும் என்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது காங்கிரஸ் தலைவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற பாஜக தலைவர்கள் மீது காங்கிரஸ் தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, டாக்டர் பரமேஷ்வர் மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகியோர் பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சமீபத்தில் கர்நாடக மாநிலம் விஜய்புராவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமித் ஷா கலவரத்தைத் தூண்டும்படி பேசியதாவும், பகை மற்றும் வெறுப்புணர்வை ஊக்குவிக்கும் விதமாக எதிர்க்கட்சிகளைக் கொச்சைப்படுத்தினார் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
புகார் அளித்த பின் பேசிய செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வகுப்புவாத கலவரம் ஏற்படும் என மத்திய உள்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். இதை அவர் எப்படி கூறலாம்? இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம்" என்றார்.
மோடி ஒரு விஷப் பாம்பு! சர்ச்சை பேச்சுக்கு புது விளக்கம் கொடுத்த காங்கிரஸ் தலைவர் கார்கே
கர்நாடகாவில் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவு! 5 ஆண்டுகளில் 12 சதவீதம் சரிவு!
புகாரில் அமித் ஷா மட்டுமின்றி சம்பந்தப்பட்ட பாஜக தலைவர்கள் மற்றும் ஏப்ரல் 25 ஆம் தேதி விஜய்புராவில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அமித்ஷாவின் பேச்சு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. இந்திய தேசிய காங்கிரஸின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்" என புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும், கூடியிருந்தவர்கள் மத்தியிலும் ஊடகங்களில் பார்ப்பவர்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சி என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட வெறுப்புப் பேச்சுகளின் வீடியோ இணைப்பும் புகாருடன் இணைக்கப்பட்டுள்ளது. ஐபிசியின் 153, 505 (2), 171ஜி மற்றும் 120பி போன்ற பிரிவுகள் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளன. மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் நட்சத்திரத் தலைவர்கள் பட்டியலில் அமித் ஷாவும் இடம்பெற்றுள்ளார். அவர் தொடர்ந்து அந்த மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
பெலகாவியில் மராட்டி ஓட்டைப் பிரிக்கும் 3வது சக்தி! பாஜக கோட்டையைத் தகர்க்குமா காங்கிரஸ்?