ஹோட்டலில் முன்பதிவு ரத்து….கரோனா பீதியால்..மக்கள் அச்சம்: கேரள அரசு கவலை

By Asianet TamilFirst Published Feb 5, 2020, 1:28 PM IST
Highlights

கரோனா வைரஸ் பீதியால் கேரளத்தில் உள்ள ஹோட்டல்களில் சுற்றுலா பயணிகள் செய்திருந்த முன்பதிவுகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுவிட்டன, இதனால் சுற்றுலாத்துறை கவலைக்குள்ளதாகியுள்ளது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
 

கரோனா வைரஸ் பீதியால் கேரளத்தில் உள்ள ஹோட்டல்களில் சுற்றுலா பயணிகள் செய்திருந்த முன்பதிவுகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுவிட்டன, இதனால் சுற்றுலாத்துறை கவலைக்குள்ளதாகியுள்ளது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரள சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேந்திரன் கூறுகையில், “ நிபா வைரஸ், மழை வெள்ளங்களை தொடா்ந்து, கரோனா வைரஸ் அச்சுறுத்தலும் கேரள சுற்றுலாத்துறையை கடுமையாக பாதித்தள்ளது.



நிபா வைரஸ் ஏற்பட்டபோது சுற்றுலாத்துறைக்கு இருந்த பாதிப்பு இப்போது கரோனா வைரஸ் பாதிப்பிலும் ஏற்பட்டுள்ளது. இந்த முறை அதன் தாக்கம் கடுமையாக உள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்கள் வெளிவந்தவுடன், மாநிலத்தில் பிப்ரவரி-மாா்ச் மாதங்களுக்காக சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் செய்திருந்த முன்பதிவுகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பேரிடா் நேரும் காலங்களில், அதுகுறித்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுபோன்ற நேரங்களில் ஊடகங்கள் பொதுமக்களிடையே அச்சமூட்டுவதை விடுத்து கட்டுப்பாடுடன் செயல்படவேண்டும். 2019-ஆம் ஆண்டின் 9 மாதங்களில் 8.19 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனா். இது 2018-இல் 10.96 லட்சமாக இருந்தது” எனத்த தெரிவித்தார்.



 கேரளத்தில் 3-ஆவது நபருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, கரோனா பாதிப்பு சூழலை மாநில பேரிடராக கேரள அரசு திங்கள்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது

click me!