நிா்பயா குற்றவாளிகளுக்கு எப்போது மரண தண்டனை: மத்திய அரசு மனு மீது இன்று தீர்ப்பு

By Asianet Tamil  |  First Published Feb 5, 2020, 1:05 PM IST

நிா்பயா குற்றவாளிகள் 4 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றும் உத்தரவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.


2012-ல் டெல்லியில் மருத்துவம மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் முகேஷ் குமார், வினய் குமார், அக்சய் சிங், பவன் குப்தா உள்ளி்ட்ட 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த ஜனவரி 22-ம் தேதி விதிக்கப்பட்ட டெத் வாரண்ட் மாற்றப்பட்டு, பிப்ரவரி 1-ம் தேதி டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் சிங் குடியரசு தலைவரிடம் கருணை மனுத்தாக்கல் செய்ததால், தண்டனையை நிறுத்திவைத்து டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tap to resize

Latest Videos

ஆனால், தண்டனையை நிறுத்தி வைத்தத்கு எதிர்ப்புத் தெரிவித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மனு மீது கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விசாரணை நடத்திய பிறகு தீா்ப்பை பிப்ரவரி 2-ஆம் தேதிக்கு உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமாா் கெய்த் ஒத்திவைத்தார். இந்நிலையில், மத்திய அரசு மனு மீதான தீா்ப்பை டெல்லி உயா்நீதிமன்றம் இன்று பிறப்பிக்க உள்ளது.

இந்த விவகாரம் தொடா்புடைய மத்திய அரசின் மனு மீது விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று டெல்லி உயா்நீதிமன்றத்தில் ‘நிா்பயா’வின் பெற்றோா் தரப்பில் செவ்வாய்க்கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
 

click me!