
உத்தரப்பிரதேச முதல்வருக்கு ஒதுக்கிய அரசு இல்லத்தில் சாமியார்கள் பூஜை, ஹோமம், செய்தால்தான் அங்கு செல்வேன் என்று முதல்வர் ஆதித்யநாத்தெரிவித்துள்ளார்.
இதனால், சாமியார்களும், சாதுக்களும் முதல்வர் இல்லத்தில் பூஜைகள் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் 21-வது முதல்வராக யோகி ஆதித்யநாத் ேநற்று முன்தினம் பதவி ஏற்றார். ஆனால், உடனடியாக அரசின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் முறையான பூஜைகள், ஹோமங்கள் இல்லாமல் வீட்டுக்குள் நுழையமாட்டேன் எனத் தெரிவித்துவிட்டார்.
இதையடுத்து புதிய முதல்வருக்கான இல்லம் புதிதாக வண்ணம் பூசப்பட்டது. வீட்டின் முகப்பில் 5, காளிதாஸ் மார்க் பங்களா என்ற பெயருடன், ஆதித்ய நாத் யோகி, முதல்வர் என்ற பெயர் பலகை தொங்கவிடப்பட்டது.
கோரக்பூரில் இருந்து 7 பேர் கொண்ட பூசாரிகள் நேற்று வரவழைக்கப்பட்டு வீட்டில் ஹேமங்களும், பூஜைகளும் நடத்தன. அதற்கு முன்னதாக முதல்வர்ஆதித்யநாத்தின் அலகாபாத் இல்லத்திலும் பூஜைகளும், ஹோமங்களும் நடத்தப்பட்டன.
அரசு இல்லத்தின் பிரதான நுழைவாயிலில் முதல்வர் ஆதித்யநாத் பெயர் பலகைக்கு அருகே, ‘ஸ்வஸ்திக்’ சின்னம், ஓம், சுபலாபம் என்றும் எழுதப்பட்டது.
இது குறித்து பூசாரி ஒருவர்கூறுகையில், “ ஒரு வீட்டுக்கு புதிதாக குடியேறும் போது, கணபதி ஹோபம், லட்சுமி ஹோமம் நடத்துவது இயல்பு .அதைத்தான் இப்போது செய்து இருக்கிறோம்’’ என்றார்.