தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை முதல் 3 நாட்களுக்கு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை முதல் 3 நாட்களுக்கு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தெலுங்கானாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. அதுமட்டுமின்றி மாநிலத்தின் பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனிடையே தெலுங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபாலப்பள்ளி, மஞ்சேரியல், நிர்மல், நிஜாமாபாத், பெத்தபள்ளே ஆகிய இடங்களில் கனமழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் ஜெயசங்கர் பூபாலப்பள்ளி, மஞ்சேரியல், நிர்மல், நிஜாமாபாத், பெத்தபள்ளே ஆகிய இடங்களில் மிக கனமழையும், அடிலாபாத், ஜகித்யால், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி, முலுகு, நிர்மல் மற்றும் நிஜாமாபாத் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அமர்நாத்தில் நடந்த பயங்கரம்.. பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு.. யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்..!
இன்று அதிகபட்சமாக ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காளேஸ்வரத்தில் 35 செ.மீ மழை பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து மஞ்சேரியல் மாவட்டம் கொட்டபள்ளே (25 செ.மீ) மற்றும் நிஜாமாபாத் மாவட்டத்தில் நவிபேட் (24 செ.மீ.) மழை பதிவாகியுள்ளது. இதை தொடர்ந்து நாளை காலை வரை அடிலாபாத், கோமரம் பீம் ஆசிபாபாத், மஞ்சேரியல், நிர்மல், நிஜாமாபாத், ஜகித்யால், பெத்தப்பள்ளி, ஜெயசங்கர் பூபாலப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலாபாத், கோமரம் பீம் ஆசிபாபாத், மஞ்சேரியல், நிர்மல், நிஜாமாபாத், ஜகித்யால், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்த அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோலுக்கு தேவையே இல்லை.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
இதனிடையே மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகள் மற்றும் கனமழை பாதிப்புகளை ஆய்வு செய்தார். இதை அடுத்து அதிகாரிகள் தீவிர எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவைப்பட்டால் சிறப்பு முகாம்களுக்கு மாற்றப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் நிலைமையை ஆய்வு செய்வதற்காக தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை முதல் 3 நாட்களுக்கு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.