நாட்டின் 75-வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் வகையில் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றியவர்களுக்கு மத்திய அரசு சான்றதழ் வழங்கி ஊக்கப்படுத்துகிறது. இந்த சான்றிதழை எவ்வாறு பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.
நாட்டின் 75-வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் வகையில் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றியவர்களுக்கு மத்திய அரசு சான்றதழ் வழங்கி ஊக்கப்படுத்துகிறது. இந்த சான்றிதழை எவ்வாறு பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.
நாட்டின் 75வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் வகையில் ஹர் கர் திரங்கா எனும் பிரச்ராத்தை பிரதமர் மோடி முன்னெடுத்தார். இதன்படி வீடுகளில் 13ம்தேதி முதல் 15ம் தேதிவரை தேசியக் கொடியை மக்கள் ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
ambani threat: mukesh ambani: ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு மிரட்டல்
பிரதமர் மோடியின் வார்த்தைக்கு மதிப்பளித்து, நாட்டின் சுதந்திரதினத்தைக் கொண்டாடும் வகையில் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி, சுதந்திரதினத்தைக் கொண்டாடினர்.
மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றியதையும், தேசியக் கொடி அருகே நின்று செல்பி எடுத்து பதிவேற்றம் செய்யவும், மத்திய அரசு பிரத்யேக இணையதளத்தை உருவாக்கியது. Hargartiranga.com என்ற இணையதளத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் ஏற்றப்பட்ட தேசியக் கொடியையும், தேசியக் கொடிக்கு அருகே செல்பி எடுத்தும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவேற்றம் செய்பவர்களுக்கு மத்தியஅரசு ஊக்கச் சான்று வழங்குகிறது.
இனிமேல் போனை எடுத்தால் ஹலோ சொல்லக்கூடாது; வந்தே மாதரம் சொல்லணும்: மகாராஷ்டிரா அமைச்சர் உத்தரவு
இந்த சான்றிதழை எவ்வாறு பெறுவது என்பது குறித்துப் பார்க்கலாம்.
1. Hargartiranga.com என்ற இணையதளத்துக்குள் செல்ல வேண்டும்
2. ஹோம்பேஜில் pin a flag என்ற பட்டனை அழுத்த வேண்டும்
3. அதன்பின் நீங்களும் வசிக்கும் இடத்துக்கு இந்த இணையதளம் செல்லும்
4. அதில் உள்ள படிவத்தில் பெயர், செல்போன் எண்ணைக் குறிப்பிட வேண்டும்.
5. ஒருவேளை உங்களிடம் இடத்தைஅல்லது வீட்டை கூகுள் மேப்பால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், முகவரியை பதிவு செய்ய வேண்டும்.
ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மக்கள் ஆசீர்வாதம் தேவை.. பிரதமர் மோடி..!
6. உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யலாம். இது கட்டாயமல்ல.
7. ஒரு மேப் ஒன்று உருவாகும். அதில் உங்கள் வசிப்பிடம் குறித்து சரியாக குறிப்பிட்டு பின் செய்ய வேண்டும்.
8. அதன்பின் அதில் ஒரு கொடி ஒன்று பின் ஆனபின், தங்களின் பங்கேற்புக்கு நன்றி என்றசெய்தி வரும்.
9. நீங்கள் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்து கொடியே பின் செய்து விட்டீர்கள். பங்கேற்புக்கான ஊக்கச் சான்றிதழை பிஎன்ஜி பார்மேட்டில் பதிவிறக்கம் செய்யலாம்.
10. இதில் தேசியக் கொடி அருகே செல்பி எடுத்து புகைப்படம் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவேற்றம் போது செல்பியுடன் உங்கள் பெயரும் அதில் பதிவிடப்படும். உங்கள் புகைப்படத்தை இணையதளம் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும்.