குறையும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 14,917 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 32 பேர் பலி..

Published : Aug 15, 2022, 02:34 PM IST
குறையும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 14,917 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 32 பேர் பலி..

சுருக்கம்

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 14,917 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 32 பேர் உயிரிழந்துள்ளனர்  

இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 14,917 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம்  15,815 ஆகவும் நேற்று 14,092 ஆகவும் இன்று14,917  ஆக கொரோனா அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  4,42,68,381 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க:குறையும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 14,092 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 41 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 14,238 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,36,23,804 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 1,17,508 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 32 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் படிக்க:குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 15,815 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 68 பேர் பலி

நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,27,069 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.19 % ஆக குறைந்துள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.27% ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.54 % ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 208.25 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 25,50,276 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!