ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரின் குடும்பத்தாருக்கு இன்று தொலைப்பேசி மிரட்டல் வந்தன. இதையடுத்து, போலீஸார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரின் குடும்பத்தாருக்கு இன்று தொலைப்பேசி மிரட்டல் வந்தன. இதையடுத்து, போலீஸார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் ரிலையன் அறக்கட்டளையின் ஹர்கிசான்தாஸ் மருத்துவமனைக்கு மிரட்டல்அழைப்பு வந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் போனை எடுத்தால் ஹலோ சொல்லக்கூடாது; வந்தே மாதரம் சொல்லணும்: மகாராஷ்டிரா அமைச்சர் உத்தரவு
ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி, அவரின் மனைவி நீட்டா அம்பானி மற்றும் குடும்பத்தினருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பான செலவுகளை ரிலையன்ஸ் குழுமமே ஏற்றுள்ளது.
இந்நிலையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் ஹர்கிசன்தாஸ் மருத்துவமனைக்கு இன்று காலையிலிருந்து முகேஷ் அம்பானிக்கு எதிராக 8 மிரட்டல் அழைப்புகள் வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் டிபி மார்க் போலீஸாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, டிபி மார்க் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்கள்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை சுயநல அரசு சிறுமைப்படுத்துகிறது: சோனியா காந்தி கண்டனம்
போலீஸார் வெளியிட்ட அறிக்கையில் “ ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும்,தொழிலதிபருமான முகேஷ் அம்பானி, அவரின் குடும்பத்தாருக்கு மிரட்டல் அழைப்புகள் வந்தன. ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் மருத்துவமனைக்கு 3க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த ஆண்டு ஒரு காரில் 20 வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டது. முகேஷ் அம்பானியின் அந்திலா இல்லத்துக்கு மிரட்டல் கடிதமும் வந்தது. இந்த வழக்கு மும்பை குற்றவிசாரணை அதிகாரி சச்சின் வாஸேயிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் தானேவைச் சேர்ந்த வர்த்தகர் மன்சுக் ஹிரன் மர்மமான முறையில் உயிரிவந்தார். முகேஷ் அம்பானி வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரன் என்பது குறிப்பிடத்தக்கது.