3 மணி நேரத்துக்கு மேல பட்டாசு வெடிக்கக் கூடாது ... கறாராக சொன்ன உயர் நீதிமன்றம்... மக்கள் அதிர்ச்சி!

Asianet News Tamil  
Published : Oct 13, 2017, 05:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
3 மணி நேரத்துக்கு மேல பட்டாசு வெடிக்கக் கூடாது ...  கறாராக சொன்ன உயர் நீதிமன்றம்... மக்கள் அதிர்ச்சி!

சுருக்கம்

High court order for Diwali Crackers

பஞ்சாப், அரியானா மாநிலங்களில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 3 மணிநேரம் மட்டுமே அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு ஏற்படும் விஷயத்தை தானாக முன்வந்து பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றம் வழக்காக பதிவு செய்தது.  

அதன் அடிப்படையில், நீதிபதிகள் அஜய் குமார், அமித் ராவல் நேற்று உத்தரவுகளை பிறப்பித்தனர். அதன்படி, “பட்டாசு விற்பனையாளர்ளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக உரிமம் குறித்து அரியானா, பஞ்சாப் அரசுகள் தகவல் தெரிவிக்க வேண்டும், தீபாவளியன்று மாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.  

போலீசார் தேவையான இடங்களில் வாகனங்களை நிறுத்தி உயர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி மக்கள் செயல்படுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். இதை போலீஸ் துணை கமிஷனர்களும், எஸ்.பி.க்களும் இதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். நீதிமன்றம் உத்தரவில்லாமல், எந்த விற்பனையாளருக்கும் நிரந்த உரிமம் வழங்கக்கூடாது’’ எனத் தெரிவித்தனர். 

PREV
click me!

Recommended Stories

உலகமே வியக்கப்போகும் இந்தியா... ஜனவரி 27-ல் வரும் மங்கள நாள்..! வயிற்றெரிச்சலில் டிரம்ப்..!
பாஜக அரசுக்கு ஆதரவு... என் முடிவில் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. காங்கிரஸ் கட்சிக்கு சசி தரூர் பதிலடி..!