
கேரள விவசாயி ஒருவர், 5 லட்சம் ரூபாய் கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த சத்து என்ற விவசாயி, பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என கூறினீர்கள். ஆனால் இதுவரை எந்த பணமும் தரவில்லை.
பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நீங்கள் தருவதாக சொன்ன 15 லட்சம் ரூபாய் இல்லையென்றாலும் பரவாயில்லை. 5 லட்சமாவது தாருங்கள் என கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில் அவருடைய ஃபெடெரல் வங்கி கணக்கு விவரங்களையும் இணைத்துள்ளார்.