பட்டினிக் கொடுமையால் வாடுபவர்கள் அதிகம் இருக்கும் 119 நாடுகள்... இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?

First Published Oct 13, 2017, 3:57 PM IST
Highlights
Global Hunger Index India ranks 100 among 119 countries down 45 positions since 201


உலக அளவில் பட்டினிக் கொடுமையால் வாடுபவர்கள் அதிகம் இருக்கும் 119 நாடுகளில் இந்தியா 100-வது இடத்தில் இடத்தில் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.

கடந்த ஆண்டு 97-வது இடத்தில்  இருந்த நிலையில் இந்த ஆண்டு 3 இடம் இந்தியா பின்தங்கியுள்ளது.

அதேசமயம் ஆசியாவில் இந்தியாவைக் காட்டிலும் ஒருபடி மேலாக வடகொரியா, வங்காளதேசம், ஈராக் நாடுகள் மேம்பட்டதாக இருக்கின்றன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் நம் நாட்டைக் காட்டிலும் பின்தங்கி இருக்கிறது.

12-வது ஆண்டு

சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனம்(ஐ.எப்.பி.ஆ.ஐ.) அமைப்பு 119 நாடுகளில் பட்டினியால் வாடுபவர்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியது. 12-வது ஆண்டாக தொடர்ந்து இந்த ஆய்வை நடத்தி வருகிறது.

ஊட்டச்சத்து குறைவின்மை, குழந்தை இறப்புவிகிதம், குழந்தைகள் சரிவிகித வளர்ச்சியின்மை, நோய்கள் ஆகியவற்றின் அடிப்படையில் 199 நாடுகளும் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த ஆய்வில் கூறப்பட்டு இருப்பதாவது-

100-வது இடம்

பட்டினி மற்றும் ஊட்டச்சத்து இல்லா குழந்தைகள் அதிகம் இருக்கும் நாடுகளஇல்  இந்தியா மிகவும் கவலைகொள்ளும் விதமாக 119 நாடுகளில் 100-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் அதிகமான அளவில் இருப்பதால் அதில் அதிகமான கவனம் செலுத்த வேண்டும்.

ஊட்டச்சத்து குறைபாடு

இந்தியாவில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தை, தன்னுடைய  உயரத்துக்கு தகுந்த எடை இல்லாமலும், தன்னுடைய வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமலும் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருக்கிறது.

வளர்ந்து வரும் நிலையில் உள்ள 119 நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் வாடி வருவது மிகவும் எச்சரிக்கை செய்யும் விதமாக இருக்கிறது.

அதேசமயம் அண்டை நாடான சீனா 29-வது இடத்திலும், நேபாளம் 72 இடத்திலும், மியான்மர் 77, இலங்கை 84, வங்காளதேசம் 88 இடத்திலும், வடகொரியா 93-வது, ஈாரக் 78-வது இடத்திலும் இந்தியாவைக் காட்டிலும் மேம்பட்டு இருக்கின்றன.

அதேசமயம்  பாகிஸ்தான் 106-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 107-வது இடத்திலும் பின்தங்கி உள்ளன.

பாக்ஸ் மேட்டர்.....

பட்டினியால் வாடுவோர் அதிகரிப்பு

இது குறித்து சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனத்தின் தெற்காசியா இயக்குநர் பி.கே. ஜோஷி கூறியதாவது-

இந்தியாவைப் பொருத்தவரை தேசிய அளவில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் கூட, வறட்சி மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறைவு ஆகியவற்றின் காரணமாக இன்னும் ஏராளமானோர் வறுமையிலும் ,பட்டினியிலும் வாடுகிறார்கள்.

இந்திய அரசு தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகள் மூலம் அடுத்துவரும் ஆண்டுகளில் நிலைமை சீரடையலாம். ‘2022ம் ஆண்டுக்குள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவாக’ மாறும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஊட்டச்சத்து குறைவின்மையை திறமையாக எதிர்கொள்ள அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த நடவடிக்கை உதவியாக அமையும்’’ எனத் தெரிவித்தார்.

click me!