உஷார்..! இனி உங்க இஷ்டத்துக்கு புதுசு புதுசா கிளப்பி விட்டீங்க .... கம்பி எண்ண நீங்க ரெடினு அர்த்தம்..!

By thenmozhi gFirst Published Dec 21, 2018, 2:26 PM IST
Highlights

எந்த ஒரு கணினியில் இருந்தோ அல்லது மொபைல் போனில் இருந்தோ பரப்பப்படும் தவறான தகவலுக்கு காரணமானர்களை மிக எளிதில் அவர்களை அடையாளம் காண்பதற்கும், அதனை தடை செய்வதற்கும் ஏற்ற வாறு முழுமையான கண்காணிப்பிற்கு அனுமதி அளித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

எந்த ஒரு கணினியில் இருந்தோ அல்லது மொபைல் போனில் இருந்தோ பரப்பப் படும்  தவறான தகவலுக்கு காரணமானர்களை மிக எளிதில் அவர்களை அடையாளம் காண்பதற்கும், அதனை தடை செய்வதற்கு ஏற்ற வாறு முழுமையான கண்காணிப்பிற்கு அனுமதி அளித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

தொழில்நுட்பம் வளர வளர, அதற்கு இணையாக பல குற்ற சம்பவங்களும் நடந்து வருகிறது. அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை கொண்டு வந்தாலும், அத்தனையும் மீறி சமூக வலைத்தளங்கள் மூலமாக பரவி விடுகிறது. அவ்வாறு பரவும் செய்திகள் மற்றும் சில புகைப்படங்கள் வீடியோக்கள், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நாட்டின் ரகசியங்கள் என எதுவும் கண் இமைக்கும் நேரத்தில் சமுக விரோதிகள் மூலமாக வெளியில் கசிந்து விடுகின்றன.

இதனை கண்காணிக்கவும், நாட்டில் எந்த ஒரு கணினியிலும் சேகரிக்கபப்டுகின்ற அல்லது உருவாக்கப்படுகின்ற, பரிமாற்றம் செய்யபப்டுகின்ற தகவல்களை கண்காணிக்கவும், இடைமறிக்கவும் அரசின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் அரசாணை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அவ்வாறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை சில மணி நேரத்திலேயே அவர்களை அடையாளம் காண முடியும் என்பது கூடுதல் தகவல். 

click me!