நேற்று இரவு முதல் பெய்து வரும் கன மழையால், மகாராஷ்டிரா மாநிலமே ஸ்தம்பித்து வருகிறது.குறிப்பாக மூலந்த் பகுதியில் செயின்ட் பியுஸ் சர்ச், சாகர் காவல் நிலையம்,கார் ஜெயபாரத் சொசைட்டி, ஹிந்த் மாதா ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி நகரின் பல முக்கிய பகுதிகளில் தொடர் மழை காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. வீடுகள் அலுவலகம் என அனைத்து கட்டிடத்திலும் தண்ணீர் புகுந்துள்ளது. பலர் அவர்களது அடுக்கு மாடி குடியிருப்புகளிலேயே தங்கி உள்ளனர்.சாலை முழுவதும் தேங்கியுள்ள தண்ணீரால் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூழ்கியுள்ளது. பல வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.ரயில் நிறுத்தம்தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது .லோக்கல் ரயில்கள் நிறுத்தப் பட்டுள்ளன.இந்நிலையில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் மழை தொடர்ந்தால். 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தில் மூழ்கிய சென்னை போன்றே, மும்பையும் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 151.8 mm மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஇதற்கு முன்னதாக, 2006 ஆம் ஆண்டு இதே போன்ற வெள்ளப்பெருக்கு மும்பையில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது