பன்றி காய்ச்சலால் எம்எல்ஏ பலிதற்போதைய சூழலில் செங்கு, பன்றி காய்ச்சல் வைரல் காய்ச்சல் என பல்வேறு காய்ச்சல் வெகுவாக பரவி வருகிறது. நாடு முழுவதுமே சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிகாய்ச்சலால் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் மண்டல்கா் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவா் கீா்த்தி குமாரி.இவருக்கு சில நாட்களாகவேகாய்ச்சல் இருந்து வந்துள்ளது. பின்னர் பரிசோதனைக்கு பின் அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இதனை தொடர்ந்து, 12 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இருபினும் சிகிச்சை பலன் இல்லாமல் இன்று காலை அவர் உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும் இவரது மறைவிற்காக பல்வேறு அரசியல் தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் வசுந்தரா ராஜேவும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது