டெல்லியில் கடும் பனிமூட்டம் : விமானம், ரயில்கள் தாமதம்!

Asianet News Tamil  
Published : Dec 08, 2016, 11:40 AM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
டெல்லியில் கடும் பனிமூட்டம் : விமானம், ரயில்கள் தாமதம்!

சுருக்கம்

வட மாநிலங்களில் பனிமூட்டம் அளவுக்கதிகமாக இருப்பதால், சாலை, ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லி சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள், கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சாலைகளில் ஊர்ந்து சென்றன.

மூடுபனி காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள் தாமதமாகின. 6 சர்வதேச விமானங்கள் மற்றும் 7 உள்நாட்டு விமானங்கள் தாமதமாகப் புறப்படுவதாகவும், ஒரு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று விமானங்கள் தரையிறங்குவதிலும் சிரமம் ஏற்பட்டது.

டெல்லியில் ரெயில்கள் சேவையிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. டெல்லிக்கு வரும் 94 ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதுடன், 15க்கும் மேற்பட்ட ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இனி நெடுஞ்சாலைகளில் லாரியை நிறுத்தினால் நேரடி அபராதம்.! லாரி டிரைவர்களுக்கு பெரிய ஷாக்.!
இந்தியா முழுவதும் 908 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தமிழ்நாட்டில் எவ்வளவு? மாஸ் காட்டும் ரயில்வே!