அம்மாவுக்கு கேரளாவில் மரியாதை... ஆனால் தமிழ்நாட்டில் இல்லை

First Published Dec 8, 2016, 10:02 AM IST
Highlights


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி நள்ளிரவில் மறைந்தார்.

அவரது இறுதி ஊர்வலவத்தில் லட்சக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் கேரள அரசு ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழகத்தில் வெளியாகும் அனைத்து மலையாள நாளிதழ்களிலும் முதல் பக்கத்தில் கண்ணீர் அஞ்சலி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் "வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு" என்ற குறளுடன் 'தமிழக மக்களின் நலனையே தன முழு மூச்சாக கொண்டு வாழ்ந்து மறைந்த மாண்புமிகு முதல்வரின் பிரிவால் வாடும் தேசத்தோடு எங்கள் ஆழ்ந்த வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறோம். அன்னாருடைய ஆன்மாசாந்தியடைய பிரார்த்திக்கிறோம்" என்ற வரிகளும் இடம்பெற்றுள்ளது தமிழக மக்களை நெகிழ செய்துள்ளது.

ஜெயலலிதா உயுடன் இருந்த பொது அவருக்காக ஆளுயர பேனர்களையும், போஸ்டர்களும் வைத்து, ஹெலிகாப்டருக்கும் காருக்கும் கும்பிடு போட்டவர்கள் இன்று ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் கூட அடிக்காத நிலையில் கேர அரசின் இந்த செயல் தமிழக மக்களை நெகிழ செய்துள்ளது.

click me!