பத்திரிகையாளர்களிடம் அத்வானி புகார் - மத்திய அமைச்சர்கள் விளக்கம்

Asianet News Tamil  
Published : Dec 08, 2016, 09:34 AM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
பத்திரிகையாளர்களிடம் அத்வானி புகார் - மத்திய அமைச்சர்கள் விளக்கம்

சுருக்கம்

நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், வழக்கம்போல் அமளி செய்தனர். இதையடுத்து அவை தலைவர், கூட்டத்தை ஒத்தி வைத்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த பாஜக மூத்த தலைவர் அத்வானி, அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம், தினமும் அவை ஒத்தி வைக்கப்படுவதையும், எதிர்க்கட்சிகளால் கூட்டம் முடக்கப்படுவதையும் செய்தியாக்கும்படி கேட்டு கொண்டார்.

அப்போது அங்கு வந்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார், மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர், அத்வானியின் புகாருக்கு, பத்திரிகையாளர்களிடம் விளக்கமளித்தனர்.

அமைச்சர் அனந்த் குமார், வெங்கைய்ய நாயுடு, கிரண் ரிஜிஜும் ஆகியோர் கூறுகையில், "எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் மீது அத்வானி அதிருப்தியடைந்துள்ளார்' என்றனர்.

PREV
click me!

Recommended Stories

இனி நெடுஞ்சாலைகளில் லாரியை நிறுத்தினால் நேரடி அபராதம்.! லாரி டிரைவர்களுக்கு பெரிய ஷாக்.!
இந்தியா முழுவதும் 908 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தமிழ்நாட்டில் எவ்வளவு? மாஸ் காட்டும் ரயில்வே!